
சத்தியபதி இயக்கத்தில்அறிமுக நாயகன் முத்து மற்றும் சரண்யா ரவிச்சந்திரன் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் தான் “லேபர்”.
கதைப்படி,
முத்து சரண்யா இருவருக்கும் திருமணமாகி ஒரு வயதில் ஒரு பெண்குழந்தை. இருவரும் கட்டிட வேலைக்குச் செல்லும் கூலி வேலை பார்த்து வருகின்றனர். முத்து தினசரி மதுகுடித்து வருவதை வழக்கமாக வைத்து இருக்கிறார், இதனால் அடிக்கடி குடும்பத்தில் பிரச்சனைகள் எழுகிறது.
மேஸ்திரி பணிபுரிபவர், தான் கஷ்டப்பட்டாலும், தனது மகனை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஓடிக் கொண்டிருக்கிறார்.
திருநங்கையாக வரும் ஜீவா, ஆசிரியருக்கு படித்துக் கொண்டே கட்டிட பணியை செய்து வருகிறார்.
கட்டிட பணிபுரியும் இவர்கள் அனைவரும் இணைந்து ஒரு தம்பதியிடம் குலுக்கல் சீட்டு ஒன்றில் சேர்கின்றனர். கடையில் இந்த தம்பதியினரால் அனைவரும் ஏமாற்றப்படுகின்றனர்.
அதன்பிறகு இவர்களின் வாழ்க்கை என்னவானது என்பதே படத்தின் மீதிக் கதை.
நாயகன் முத்து மற்றும் சரண்யா ரவிச்சந்திரனின் நடிப்பு பாராட்டுக்குறியது. முத்து இன்னும் சற்று கூடுதல் பயிற்சி எடுத்து நடித்தால், தமிழ் சினிமாவில் நிச்சயம் ஒரு நல்ல இடம் கிடைப்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
நாயகி சரண்யா, தமிழ் சினிமாவில் ஏற்கனவே முத்திரை பதித்த நடிகை. என்னவிதமான கதாபாத்திரம் கொடுத்தாலும், அதற்கான மெனக்கெடலோடு முழு உழைப்பையும் கொடுத்து நடிப்பவர். இப்படத்திலும் அதேபோல், தனது கொடுக்கப்பட்ட கேரக்டரை மிகவும் கச்சிதமாக செய்து முடித்திருக்கிறார்.
திருநங்கையாக வரும் ஜீவா ஆங்காங்கே திருநங்கைகள் படும் இன்னல்களை சந்திக்கும் கனமான துயரத்தை எடுத்துச் சொல்லிவிட்டுச் செல்கிறார். அதில் கைதட்டலும் பெறுகிறார்.
மேஸ்திரியாக வருபவர், சீட்டு நடத்தும் தம்பதிகள், இன்ஸ்பெக்டர் என ஒரு சில கதாபாத்திரங்களே படம் முழுக்க வருகின்றனர்.
ஒளிப்பதிவில் சற்று கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். ஒரு தெருவில் பைக் சென்றால், அந்த தெரு முடியும் வரையிலும் அந்த காட்சியை காட்சிப்படுத்தியிருப்பது சோதனையை பொறுமையின் உச்சிக்கே எடுத்துச் சென்று விட்டது.
நிஜில் தினகரனின் இசையும் ஜொலிக்கவில்லை.
கட்டிட தொழிலாளர்கள் படும் இன்னல்களையும் துயரங்களை எடுக்க நினைத்த இயக்குனர் அதை சரிவர சொல்லாமல் சென்று விட்டது போன்ற ஒரூ உணர்வு.
அவர்களுக்கான காப்பீடு திட்டம் சரியான முறையில் கொடுக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தையும் கூறாமல் சென்றுவிட்டார் இயக்குனர்.
லேபர் – கட்டுமான தொழிலாளர்களின் எண்ணிலடங்கா வலிகள்..





