
அறிமுக இயக்குனர் கார்த்திக் இயக்கத்தில் விக்ரம் பிரபு, ஸ்ரீ திவ்யா, அட்டு ரிஷி, செளந்தர் ராஜா உள்ளிட்ட நடிகர்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் “ரெய்டு”.
தீபாவளி தின விடுமுறை வெளியீடாக பெரிதான ப்ரொமோஷன் எதுவுமில்லாமல் வெளிவந்திருக்கிறது.
சென்னையில் போலீஸ் ஏசிபி ஆக பணிபுரிகிறார் விக்ரம் பிரபு. ஹீரோ போலீஸ் என்றால் வில்லன் ரெளடியாக தான் இருக்க முடியும். அப்படியாக இப்படத்தில் மெயின் வில்லனாக வருகிறார் ரிஷி.
விக்ரம் பிரவுவின் குடைச்சல் அதிகமாக இருக்க, பதிலுக்கு ரிஷியும் அவரது நண்பனுமான செளந்தர்ராஜாவும் இணைந்து விக்ரம் பிரவுவிற்கு மனைவியாக ஆகவிருக்கும் ஸ்ரீ திவ்யாவை கொன்று விடுகின்றனர்..
பதிலுக்கு, செளந்தர்ராஜனையும் டேனியலையும் கொன்று விடுகிறார் விக்ரம் பிரபு. இறுதியில் ரிஷியை பழி வாங்கினாரா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை…
தனது கேரக்டரை எப்போதும் சரியாக செய்து வரும் விக்ரம் பிரபுவிற்கு ஏற்ற படம் இதுவல்ல என்பது தெளிவாக தெரிகிறது.
சரியான கதை இல்லாமல் படம் நகர்வது படத்தினை பார்ப்பவர்களை சோதனைக்கு உள்ளாக்கி விடுகிறது.
அதிக இரைச்சலோடு பின்னணி இசை எரிச்சலை வரவைக்கிறது.
ஒளிப்பதிவு சற்று ஆறுதல்…
கதையை தெளிவான ஓட்டத்தோடு கொடுத்து ரசிகர்களை ரசிக்க வைக்காமல் நம்மை பெரிதாகவே படம் சோதிக்க வைத்துள்ளது.
ரெய்டு – சத்திய சோதனை





