விமர்சனங்கள்

முஸ்தபா முஸ்தபா – விமர்சனம் 2.5/5

பிரவீன் சரவணன் அவர்களின் எழுத்து மற்றும் இயக்கத்தில் சதீஸ், சுரேஷ் ரவி, மோனிகா, மானசா செளத்ரி, கருணாகரன், புகழ், ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி வெளிவந்திருக்கும் திரைப்படம் முஸ்தபா முஸ்தபா.

படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார் விஷ்ணு ஸ்ரீ. இசையமைத்திருக்கிறார் ஜான்ஸ் ராபர்ட். தயாரித்திருக்கிறார் பிரதீப் மாதவன்

நண்பர்களாக இருக்கின்றனர் சதீஷ் மற்றும் சுரேஷ் ரவி. இருவரும் ஒரு தனியார் டிவி சேனலில் வேலை பார்த்து வருகின்றனர். இதில் நாயகி மோனிகாவை பார்த்ததும் அவர் மீது காதல் கொள்கிறார் சதீஷ். ஒரு தலை காதலானது பின் இருதலை காதலாக மாறி விடுகிறது. இந்த காதல் அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது. பெற்றோர்கள் சம்மதத்தில் இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது.

இன்னும் சில நாட்களில் இருவருக்கும் திருமணம் நடைபெற இருக்கிறது. அந்த சமயத்தில் சதீஷ் முன்னொரு காலத்தில் நடித்த ஆபாச படம் ஒன்று இணையத்தில் வைரல் ஆகி விடுகிறது. இதனைக் கண்டு அதிர்ச்சியாகிறார் சதீஷ். யார் அதனை இணையத்தில் ஏற்றினார் என்று தேடி அலைகிறார்கள் சதீஷ் மற்றும் சுரேஷ் ரவி. இந்த நிலையில், தனது முறைப்பெண்ணான மோனிகாவை திருமணம் செய்ய விடாமல் செயத் சதீஷை பழி வாங்கத் துடிக்கும் கதாபாத்திரத்தில் கே பி ஒய் புகழ்.

இறுதியில் படத்தினை இணையத்தில் ஏற்றிய அந்த நபரை சதீஷ் கண்டுபிடித்தாரா இல்லையா.,? சதீஷுக்கு மோனிகாவிற்கும் திருமணம் நடந்ததா இல்லையா.?? என்பதை படத்தின் மீதி கதை கிளைமாக்ஸ்..

கதை நாயகனான சதீஷ் படத்தில் நல்லதொரு கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தாலும், இந்த கதைக்கு இவர் பொருத்தமாக இருப்பார் என்று எப்படி இயக்குனர் தேர்ந்தெடுத்தார் என்று தெரியவில்லை. கதையில் சதீஷ் காமெடி என்ற பெயரில் செய்த சம்பவம் எதுவுமே வொர்க் அவுட் ஆகவில்லை. கருணாகரனின் காமெடி கொஞ்சம் ரசிக்க வைத்திருக்கிறது.

மிகவும் ட்ரை ஆக இருந்தது படத்திற்கு பெரும் பின்னடைவு தான்., இவர் மட்டும் இல்லாது, கே பி ஒய் புகழ் மற்றொரு புறம் நம்மை எரிச்சலடைய வைத்துவிடுகிறார். அவர் வரும் காட்சிகளில் ஒரு காட்சியில் கூட சிரிப்பு வரவே இல்லை.

ஒரு சில படங்களில் நல்ல தெரிந்த கதாபாத்திரங்களில் நடித்த சுரேஷ் ரவி இந்த படத்தில் தனக்கு கொடுக்கப்பட்டதை அளவாக செய்து முடித்து இருக்கிறார். தான் வரும் காட்சிகளில் அழகாகத் தெரிகிறார் மோனிகா. நடிப்பிலும் எந்த குறையும் சொல்ல முடியாது.

ஒளிப்பதிவு மற்றும் இசை படத்திற்கு ஓகே ஆக தான் இருக்கிறது. படத்தில் காமெடிகளுக்கு அநேக இடங்கள் இருந்தாலும் அதனை இயக்குனர் சரியாக பயன்படுத்தவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

இன்னும் அதிக பயிற்சி எடுத்திருக்கலாமே என்று கூற வைத்துவிட்டார் இயக்குனர். அதிலும் க்ளைமாக்ஸில் ட்விஸ்ட் வைத்திருக்கிறார்கள். என்னவென்று சொல்வது அதை…

Facebook Comments

Related Articles

Back to top button