Spotlightசினிமா

ஹரிசங்கர் – ஷாரி கூட்டணியில் ‘நீயும் நானும்’ காதல் இசை ஆல்பம் வெளியீடு!

‘நடுவன்’ பட இயக்குநர் சரண் என்கிற ஷாரி இயக்கத்தில், நடிகர் ஹரிசங்கர் நாராயணன் நடித்துள்ள ‘நீயும் நானும்’ (Neeyum Naanum) இருமொழி மியூசிக்கல் ஆல்பம் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

Hidden Talent Studios தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த ஆல்பம், தமிழில் ‘நீயும் நானும்’ என்றும், மலையாளத்தில் ‘ഞാനും’ (Njyaanum) என்றும் Saregama Music மூலம் வெளியாகியுள்ளது.

பேசவும் கேட்கவும் முடியாத இளைஞன், தனது காதலியின் ஆசைகளை நிறைவேற்றுவதற்காக அவளுடன் மேற்கொள்ளும் அழகான பயணத்தை மையமாகக் கொண்டு இந்தக் காதல் பாடல் உருவாகியுள்ளது.

ஹரிசங்கர் நாயகனாகவும், சுஜா சுகுமார் நாயகியாகவும் நடித்துள்ளனர். யுதிஷ்டரன் இசையமைப்பில் ஹனன் ஷா மற்றும் நிஹால் சாதிக் பாடியுள்ளனர்.

சென்னை, பெங்களூரு, கோவா, ஜெய்ப்பூர், சிம்லா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் படமாக்கப்பட்டுள்ள இந்த ஆல்பம், திரைப்பட பாணியிலான காட்சியமைப்புகளுடன் உருவாகியுள்ளது.

வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வந்த ஹரிசங்கர், இதில் மாறுபட்ட காதல் நாயகனாக நடித்துள்ளார். காதல், பயணம், இசை மற்றும் எதிர்பாராத திருப்பத்துடன் உருவாகியுள்ள ‘நீயும் நானும்’ ஆல்பம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறது.

Facebook Comments

Related Articles

Back to top button