
சீனாவில் இருந்து கிளம்பிய கொரோனா தொற்று நோய், உலகம் முழுவதும் வேகமாக பரவி பல்லாயிரக்கணக்கான உயிர்களை கொண்டு சென்று விட்டது.
இன்னமும் அதன் வீரியம் குறையாது, பல உயிர்களை பலியாகி கொண்டிருக்கின்றன.
இதனால் பல கோடி மக்கள் வீட்டுக்குள்ளே முடங்கி இருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
பல லட்சம் மக்கள் உண்ண உணவின்றி பரிதவித்து வருகின்றனர்.
தற்போது உலகத்தில் 5 லட்சம் பேருக்கு மேல் கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸால் இதுவரை 20 ஆயிரத்திற்கும் மேலாக இறந்துள்ளனர்.
தினப்படி கூலிக்கு வேலை செய்த தொழிலாளர்கள் மற்றும் ஏழைக் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ஹாலிவுட் நடிகையான ஏஞ்சலீனா ஜோலி கொரோனாவால் பாதிக்கப்பட்டு பசியால் வாடும் குழந்தைகளுக்காக 7.5 கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார்.
நோ கிட் ஹங்ரி என்கிற அமைப்பிடம் நிவாரண நிதியை அவர் வழங்கியுள்ளார். இந்த பணம் பசியால் வாடும் குழந்தைகளுக்காக பயன்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.





