Spotlightஇந்தியாதமிழ்நாடு

அறந்தாங்கி வீரன் .. இந்த தீரன்.. யார் இவர்.?

போராடினால் மட்டுமே நமக்கான உரிமைகளை நாம் பெற முடியும் என்ற சூழலில் காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

போராட்டம் என்று சென்றால் நம் பொழப்பை யார் பார்ப்பது.? என்ற ஒற்றை கேள்வியோடு கடந்து செல்லும் கால்கள் பல இந்நாட்டில் இருக்கிறது. ஆனால், ஒரு சில கால்களை தவிர..

அந்த ஒரு சில கால்களில் முக்கியமானவர் தான் இந்த தீரன் வினோத்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியைச் சேர்ந்தவர் தான் இந்த வினோத்குமார் என்கின்ற தீரன் வினோத்.

பள்ளி படிப்பின் போதே நண்பர்களுடன் இலகுவாக பேசுவதிலும், அவர்களுடன் நட்பு கொள்வதிலும் வல்லவர் இந்த தீரன் வினோத்.

பள்ளி வாழ்க்கையின் போதே தனது நண்பர்களுடன் இணைந்து பல உதவிகளை தன்னைச் சுற்றி இருப்பவர்களுக்கு செய்து வருவதில் திறமை கொண்டவர்.

அவரின் கல்லூரிப் படிப்பின் காலம் அது, 2009 ஆம் ஆண்டு தமிழக மக்கள் எளிதில் மறக்க முடியா வருடம் அது. ஒவ்வொரு தமிழனின் இதயத்திலும் வடுவாக இன்னமும் இருக்கும் துன்ப நிகழ்வு அது.

ஈழப் போர் என்ற ஒரு வரலாற்று சம்பவம் நடந்து கொண்டிருந்த காலம் அது. ஈழத்தமிழர்களின் வாழ்வுக்காக தமிழ்நாட்டின் முதல் முதலாக சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்த மாணவன் வினோத்குமார். அப்போதே பெரும் அரசியல் பிரமுகர்களால் உற்று நோக்கப்பட்டவர்.

எளிய மக்களுக்காக கிடைக்காத உரிமையை பெற்று தரவும் பல போராட்டங்களை முன்னெடுத்துச் சென்றவர் தான் இந்த வாலிபர்.

அதுமட்டுமில்லாமல் காவிரி போராட்டத்தின்போது இளைஞர்கள் பலரை திரட்டி விவசாயிகளுக்காக அவர்களின் கைகோர்த்து போராடியதில் முக்கிய பங்காற்றியவர்.

கொரோனா காலகட்டத்தில் உணவின்றி தவித்த மக்களுக்காக, தானே உணவு தயாரித்து சாலை ஓரங்களில் இருக்கக்கூடிய மக்களுக்கு உணவு அளித்து அவர்களின் உயிரை தன்னுயிராக நினைத்து உதவி செய்து வந்தவர் இந்த தீரன்.

அறந்தாங்கி சுற்று வட்டார கிராமங்கள் மற்றும் நகரங்களில் மக்களின் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் முன் நின்று போராடி அந்த உரிமையை பெற்று தருவதில் வல்லவர் இந்த வீரன், தீரன் வினோத்.

பல அச்சுறுத்தல்கள், பல இன்னல்கள் என எதுவந்த போதிலும் மக்களின் நலன் ஒன்றே தனது மூச்சு என்று களம் கண்டு போராடுபவர் இவர்.

இவரது போராட்ட பயணங்கள் இன்றளவும் மக்களுக்காக தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது.. இவரை வெளிக்கொண்டு வருவதில் எங்களுடைய தமிழ் வீதி கடமைப்பட்டிருக்கிறது.

Facebook Comments

Related Articles

Back to top button