
அறிமுக இயக்குனர் சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் Axess Film Factory சார்பில் தயாரிப்பாளர் G.டில்லிபாபு தயாரித்துள்ள “பேச்சிலர்” திரைப்படம் வரும் டிசம்பர் 3ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.
இதன் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது.
விழாவில் தயாரிப்பாளர் டில்லி பாபு, ஜி வி பிரகாஷ்குமார், திவ்யா பாரதி, விநியோகஸ்தரர் சக்திஃபிலிம் பேக்டரி சக்திவேலன், உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய சக்திவேலன்,
இந்தப்படத்தை நான் பார்த்து விட்டேன். சாதாரண ரசிகனாக சொல்கிறேன் இந்தப்படம் மிக முக்கியமான படமாக இருக்கும். படம் பார்த்து மறுநாளும் மனதிற்குள் இந்தப்படம் ஓடிக்கொண்டே இருந்தது. ஓ மை கடவுளே படத்திற்கு பிறகு தயாரிப்பாளர் டில்லிபாபு இந்தப்படத்தை தியேட்டரில் தான் ரிலீஸ் செய்வோம் ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்துள்ளோம் என்றார்.
டப்பிங் மட்டுமே 800 மணி நேரத்திற்கும் மேலாக செய்திருக்கிறார். இவரைப்போல் சமீபத்தில் திரைத்துறை மீது காதல் கொண்ட எவரையும் பார்த்தில்லை. தமிழ் சினிமாவுக்கு ஒரு மிகப்பெரிய கலைஞனாக இப்படத்தின் மூலம் வந்திருக்கிறார் இயக்குநர் சதீஷ்.
குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ஷங்கர் படம் போல் இப்படம் இருக்கும். ஜீவி சாரோட கேரியர் பெஸ்டாக இப்படம் இருக்கும். இளைஞர்களுக்கான படமே இங்கு இல்லை அதை போக்கும் விதமாக இப்படம் இருக்கும். எல்லோரும் அனுபவித்து ரசித்து பார்க்கும் படைப்பாக இப்படம் இருக்கும். தமிழ் சினிமாவில் அசைக்க முடியா ஒரு புதுமையான படமாக நிச்சயம் “பேச்சிலர்” இருக்கும்.” என்று கூறினார்.





