
முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அவரது அண்ணன் மகள் தீபா அரசியல் களத்திற்கு புகுந்தார். எம் ஜி ஆர் அம்மா தீபா பேரவை என்ற இயக்கத்தை ஆரம்பித்து அதை நடத்தி வந்தார்.
பின்னர் அதனை அதிமுகவுடன் இணைப்பதாக கூறினார். இந்த நிலையில், அவர் இன்று “முழுமையாக பொதுவாழ்க்கையில் இருந்து விலகிக் கொள்கிறேன், யாரும் என்னை தொந்தரவு செய்ய வேண்டாம்,” என்று கூறியுள்ளார்.
மேலும் தனது முகப்பக்கத்தில், “ பேரவையை அதிமுக உடன் இணைத்து விட்டேன், விருப்பம் இருந்தால் அந்த கட்சியில் சேர்ந்து கொள்ளுங்கள். தீபா பேரவை பெயரைச் சொல்லி தொடர்ந்து என்னை துன்புறுத்துவதை இதோடு நிறுத்திக் கொள்ளுங்கள். எனக்கு குழந்தை பெற்றுக் கொண்டு என கணவரோடு வாழ ஆசை.” என்று கூறியுள்ளார்.
Facebook Comments