Spotlightவிமர்சனங்கள்

ப்ரீடம் – விமர்சனம் 3/5

ரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருக்கும் படம் தான் இந்த “ப்ரீடம்”.

கதைப்படி

1990 காலகட்டத்தில், இலங்கையிலிருந்து அகதிகளாக தமிழகத்திற்கு தஞ்சம் புகுந்தனர் தமிழர்கள். அவர்கள், சிலர் ஆங்காங்கே கேம்ப் அமைத்து தங்க வைக்கப்பட்டனர். இந்த காலகட்டத்தில், சிலரால் முன்னாள் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி தற்கொலைப்படைத் தாக்குதலில் கொல்லப்பட்டார்.

இந்த கொலை வழக்கில் சந்தேகிக்கப்பட்ட சிலரை விசாரிப்பதற்காக சுமார் 45 பேர் வெவ்வேறு கேம்ப் பகுதியில் இருந்த தமிழர்களை வேலூர் கோட்டைக்கு அழைத்துச் செல்கின்றனர்.

அங்கு, அனைவரையும் ஜெயில் செட்-அப் போன்று ஒன்று அமைத்து, அனைவரையும் அடைத்து சித்தரவதைப்படுத்துகின்றனர். வருடங்களும் உருண்டோட, 45 பேரும் அங்கேயே சிறைபட்டு, நாளுக்கு நாள் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். தங்களது மனைவி, குழந்தைகளை காணாமல் அடைபட்டு கிடந்த இவர்களுக்கு நீதி கிடைத்ததா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.

45 பேரில் ஒருவராக படத்தில் நடித்தவர் சசிகுமார். மாறன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருக்கிறார். தனக்கான பணியை மிகவும் சரியாக செய்திருக்கிறார் சசிகுமார். போலீஸிடம் அடி வாங்கும் காட்சியில் அனைவரின் கண்களில் இருந்து ஈரத்தை எட்டிப் பார்க்க வைத்து விடுகிறார். தனக்கே உரித்தான உடல் மொழியில் நடித்திருக்கிறார்.

மேலும், சிறைக்குள் அடைபட்டு சசிகுமாருடன் இருந்த கதாபாத்திரங்கள் அனைவருமே அக்கதாபாத்திரங்களாகவே மாறியுள்ளனர். அதிலும், சசிகுமாருடன் எப்போதும் சண்டைக்கு நிற்கும் அந்த நால்வரும் படத்திற்கு மிகப்பெரும் பலம் என்றே கூறலாம்.

சசிகுமாரின் மனைவியாக நடித்த லிஜோமோல் ஜோஸ், ஆங்காங்கே பேசும் வசனங்கள் சாட்டையடி தான். போலீஸாக நடித்த போஸ் வெங்கட், சத்யா உள்ளிட்ட நடிகர்களும் தங்களது அனுபவ நடிப்பில் விறைப்பாக நின்றனர்.

போலீஸ் அதிகாரியாக நடித்த சுதேவ்நாயர், பார்த்தாலே இவர் மீது அனைவருக்கும் கோபம் வரும்படியான ஒரு கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். வாய் பேசாமலே தனது நடிப்பின் திறனை நன்றாகவே வெளிப்படுத்திவிட்டார் பாய்ஸ் மணிகண்டன்.

வக்கீலாக மாளவிகா அவிநாஷ், போலீஸாக ரமேஷ் கண்ணா, மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் மு ராமசாமி உள்ளிட்ட நடிகர்களும் கதாபாத்திரங்களுக்கும் பொருத்தமாக பொருந்தியிருந்தனர்.

வலியை மிகவும் அதிகமாக கொடுத்த இயக்குனர் அதை நம்மிடத்தில் கடத்த சற்று தவறியிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். 45 பேரும் இங்கிருந்து எப்படியாவது தப்பித்துவிட வேண்டும் என்று நமக்குள் தோன்றும் அளவிற்கான எண்ணத்தை கொடுத்தாலும், ஒரு புல்லரிக்க வைக்கும் goosebumps உணர்வை கடத்த இயக்குனர் சற்று முயற்சித்திருக்கலாம்.

சின்ன சின்ன குறைகள் எட்டிப்பார்த்தாலும், இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கிறது என்பதை நிகழ்கால மற்றும் எதிர்கால சந்ததியினர் அறிந்து கொள்ளும் விதமாக ஒரு படைப்பை படைத்திருக்கும் படக்குழுவிற்கு பெரும் வாழ்த்துகளை கூறி கொள்ளலாம்.

ஜிப்ரானின் இசையில் பின்னணி இசை படத்தோடு சேர்ந்து நாமும் பயணம் புரிய பெரிதும் கைகொடுத்திருக்கிறது. என் எஸ் உதயகுமாரின் ஒளிப்பதிவு காட்சிகளை கச்சிதமாக படமாக்கியிருந்தது.

ஸ்ரீகாந்தின் படத்தொகுப்பும் ஷார்ப் தான். சி உதயகுமாரின் ஆர்ட் பணிகள் கூர்ந்து கவனிக்கும்படியாக இருந்தது.

மொத்தத்தில்,

ஃப்ரீடம் – அதீத வலி

Written & Directed By Sathyasiva
Produced By: Pandiyan Parasuraman
Co.Producer: Sujatha Pandiyan
Music: Ghibran
Dop: N.S Uthayakumar
Editor: Srikanth N.B
Art: C.Uthayakumar
Lyrics: Snehan – Mohan Rajan – Arun Bharathi
Action: T.Ramesh – Don Ashok – Danger Mani
Co Director: Vijay Prasaad
Associate Director: Shankar Nag Vijayan
Costume Designer: Sivaranjani
Audiography: Harish

Facebook Comments

Related Articles

Back to top button