
‘விஸ்வரூபம்’, ‘தூங்காவனம்’, ‘மாயவன்’, ‘ராட்சசன்’ உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்து, தற்போது முன்னணி இசையமைப்பாளராக வலம் வருகிறார் ஜிப்ரான். கமல் தயாரிப்பில் உருவாகும் படங்களுக்கு ஜிப்ரான் தான் இசையமைப்பாளர் என்று கூறும் அளவுக்கு கமலுடன் நெருக்கம் காட்டி வருகிறார்.
இந்நிலையில் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் படப்பிடிப்பில் அஜித்தை சந்தித்து பேசியுள்ளார் ஜிப்ரான்.
இந்த சந்திப்பு குறித்து ஜிப்ரான் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: ஒரு உண்மையான அஜித் ரசிகனின் மனநிலையில் இருக்கிறேன். அஜித் பற்றி மற்றவர்கள் என்ன எல்லாம் சொல்வார்களோ அதை காட்டிலும் மேலானவராக இருக்கிறார்.
பல விஷயங்கள் குறித்து பேசினார். ஆனால் ஒரே ஒரு வார்த்தை என் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. நாம் சேர்ந்து பணிபுரிவோம்’ என்பதே அது. நன்றிகள்’. இவ்வாறு ஜிப்ரான் தெரிவித்துள்ளார்.





