
திருப்பூரில் இயற்கை மருத்துவ முறையில் யூடியூப்பை பார்த்து பிரசவம் பார்த்த பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பேசிய அமைச்சர் விஜய பாஸ்கர்,’
திருப்பூரில் இயற்கை மருத்துவ பிரசவத்தில் பெண் உயிரிழந்தது வேதனை, அதிர்ச்சி அளிக்கிறது. மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது; 70% பிரசவம் அரசு மருத்துவமனைகளில் தான் நடைபெறுகிறது.
மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் ரூ.4.5 கோடியில் வலி நிவாரண சிகிச்சை மையங்களும்; கேன்சர் போன்ற தீராத நோய்களால் ஏற்படும் வலிகளுக்கு நிவாரண மையங்கள் ஏற்படுத்தப்படும்.
தீராத நோய்களால் தற்கொலை செய்து கொள்வோருக்கு ஆலோசனை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
Facebook Comments