இயக்குனர் பாரத் மோகன் (சி.வி.குமார் இயக்கிய மாயவன் படத்தின் இணை இயக்குனர் மற்றும் மாலை பொழுதின் மயக்கத்திலே படத்தின் உதவி இயக்குனர்), தற்போது இந்த டிஜிட்டல் உலகில் இயக்குனராக அறிமுகிறார்.
நல்ல திறமையான நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குழுவோடு “இக்லூ” என்று தலைப்பிட பட்ட ஒரு ரொமாண்டிக் காமெடி படம் மூலம் தனது பயணத்தை துவங்குகிறார் இயக்குனர் பாரத் மோகன். இது பற்றி அவர் கூறும்போது, “இக்லூ” ஒரு நகைச்சுவை மற்றும் எமோஷன் கலந்த ஒரு முழு ரொமாண்டிக் காமெடி திரைப்படம். மாயா, இறவாக்காலம், நரகாசூரன் ஆகிய படங்களின் மூலம் தன் திறமையை நிரூபித்த இசையமைப்பாளர் ரான் ஏதன் யோகன் இசையமைத்திருப்பது கூடுதல் சிறப்பு.
அவரது நடிகர்களை பற்றி அவர் கூறும்போது, “அஜ்மத் கான் நாயகனாக நடிக்கிறார். காட்சியின் சூழ்நிலைகளை உடனடியாக புரிந்து கொண்டு, சிறப்பாக நடிக்கக் கூடியவர் என்பதால் அவரை முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க தேர்வு செய்தோம். மேலும், மாயா உட்பட எல்லா திரைப்படங்களிலும் அவரது முக்கியத்துவத்தை பற்றியெல்லாம் பொருட்படுத்தாமல், தனது தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தினார். அஞ்சு குரியன் சென்னை 2 சிங்கப்பூர் படத்தின் நாயகி, ஏற்கனவே ரசிகர்கள் மனதை கவர்ந்திருக்கிறார். அவரது அழகான தோற்றத்திற்காக மட்டுமல்லாமல், கதாபாத்திரத்தின் சாரத்தை உணர்ந்து சிறப்பாக நடிக்கக் கூடியவர் என்பது தான் அவரை தேர்ந்தெடுக்க முழுமுதற் காரணம்.
ஜார்ஜ் சி வில்லியம்ஸ் உதவியாளர் குகன் எஸ் பழனி (ஒளிப்பதிவு), பிரசன்னா ஜி.கே. (மாரி, மாரி 2 மற்றும் நெஞ்சம் மறப்பதில்லை படங்களின் எடிட்டர்), விஜய் ஆதிநாதன் (கலை) மற்றும் தாமஸ் குரியன் (ஒலி) ஆகியோர் தொழில்நுட்ப கலைஞர்களாக பணியாற்றுகிறார்கள்.
வலைத்தளங்களில் நேரடியாக ரிலீஸாகும் “இக்லூ” படத்தின் வெளியீட்டு தேதி தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.