
இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆசிய கோப்பைக்கான அரை இறுதி சுற்று கிரிக்கெட் போட்டி இன்று துபாயில் நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக இமான் உல் காக் மற்றும் பகார் ஷமான் களம் இறங்கினர்.
இந்திய அணியின் வலுவானன் பந்து வீச்சில் பாகிஸ்தான் அணி வீரர்கள் தாக்கு பிடிக்க முடியாமல் ரன் எடுக்க திணறினர் பாகிஸ்தான் அணி வீரர்கள்.
இறுதியாக 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 237 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது பாகிஸ்தான் அணியால். அதிகபட்சமாக சோயப் மாலிக் 78 ரன்கள் எடுத்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து 238 ரன்கள் எடுத்தால் என்று வெற்றி இலக்குடன் களமிறங்கினர் ரோஹித் ஷர்மா மற்றும் தவான். இவர்கள் இருவரும் பாகிஸ்தான் பந்து வீச்சை பொறுமையாக கையாண்டு நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இருவரும் அடுத்தடுத்து சதத்தை கடந்து இந்திய ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு வழி செய்தனர். தவான் 114 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். ரோஹித் ஷர்மா 111 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.
40வது ஓவரில் 238 ரன்களுக்கு ஒரு விக்கெட் மட்டுமே இழந்து பாகிஸ்தானை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது இந்தியா.





