இசையமைப்பாளராக அறிமுகமாகி பின் கதாநாயகனாக உருமாறி பல வெற்றிப்படங்களை கொடுத்த நடிகர் விஜய் ஆண்டனி தற்போது நடிகர் அர்ஜூனுடன் இணைந்து “கொலைக்காரன்” எனும் படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தை தியா மூவிஸ் சார்பாக B.ப்ரதீப் தயாரிக்க ஆண்ட்ரியு லூயிஸ் இயக்குகிறார்.
ஆஷிமா நர்வால் கதாநாயகியாக நடிக்க, முக்கிய வேடங்களில் நாசர், சீதா, V.T.V. கணேஷ் ஆகியோர் நடிக்கின்றனர்.
தற்போது இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பில் நடிகர் அர்ஜூன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு முடிவடைந்துள்ளது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்கான ஆயுத்த வேலைகளில் படக்குழுவினர் இறங்கியுள்ளனர்.
Facebook Comments