Spotlightசினிமா

லைகா தயாரிப்பில் அருள்நிதி நடிக்கும் ‘திருவின் குரல்’

லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தனது 24வது படைப்பான ‘புரொடக்‌ஷன் நம்பர்.24’ படத்திற்கு ‘திருவின் குரல்’ (Voice of Thiru) எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. இதில் அருள்நிதி கதாநாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் ஹரிஷ் பிரபு, இதற்கு முன் அருண்குமாரிடம் ’பண்ணையாரும் பத்மினியும்’, ’சேதுபதி’ ஆகிய படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றியவர், அதைத் தொடர்ந்து ’புரியாத புதிர்’ படத்தில் ரஞ்சித் ஜெயக்கொடியிடம் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

படத்தின் தலைப்பில் ’திருவின் குரல்’ எனக் குறிப்பிடுவது போல கதாநாயகனது கதாபாத்திரம் பேச்சு குறைபாடு இருப்பவராக (speech impairment) சித்தரிக்கப்பட்டுள்ளது. தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான அழகான மற்றும் உணர்ச்சிபூர்வமான பிணைப்பை படம் கூற இருக்கிறது. அருள்நிதி மகனாக நடிக்க, மூத்த இயக்குநரான பாரதிராஜா அவரது தந்தையாக நடிக்கிறார். ஆத்மிகா நாயகியாக நடிக்கிறார். சுபத்ரா ராபர்ட், மோனேகா சிவா, அஷ்ரப், ஜீவா, ஹரிஷ் சோமசுந்தரம், மகேந்திரன், முல்லையரிசி மற்றும் பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

’திருவின் குரல்’ படத்தின் மொத்த படப்பிடிப்பும் 42 நாட்களில் முடிவடைந்தது. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, பாண்டிச்சேரி, காரைக்கால் ஆகிய இடங்களிலும், சென்னையில், நகர்ப்புற பகுதி மற்றும் அதைச் சுற்றியுள்ள பல இடங்களிலும் படமாக்கப்பட்டுள்ளது.

சாம் சிஎஸ் இசையமைக்க, சின்டோ போடுதாஸ் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் ரிலீஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்திடமிருந்து வெளியாகும்.

படத்தின் தொழில்நுட்பக்குழு விவரம்:

இசை – சாம் சி.எஸ்.,
ஒளிப்பதிவு – சின்டோ போடுதாஸ்,
படத்தொகுப்பு – கணேஷ் சிவா,
கலை – இ.தியாகராஜன்,
ஸ்டண்ட் – திலிப் சுப்பராயன், பாண்டம் பிரதீப்,
பாடல் வரிகள் – உமாதேவி, கருப்பன்,
ஆடை வடிவமைப்பாளர் – டினா ரொசாரியோ,
ஒப்பனை – ஆர்.சீரலன்,
ஒலி வடிவமைப்பு – பிரதாப்,
ஒலிக்கலவை – டி.உதயகுமார்,
VFX – ஆர். ஹரிஹர சுதன்,
ஸ்டில்ஸ் – மோதிலால்,
DI – இன்ஃபினிட்டி மீடியா,
கலரிஸ்ட் – சண்முக பாண்டியன்.எம்,
மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா, ரேகா டி’ஒன்,
டைரக்ஷன் டீம் – கிஷோர் கே.குமார், ஹரி பிரசாத் வி,
தயாரிப்பு நிர்வாகி – கே.ஆர்.பாலமுருகன்,
சீனியர் எக்ஸிகியூட்டிவ் புரொடக்ஷன்ஸ் – சந்திரசேகர் வி,
நிர்வாகத் தயாரிப்பாளர் – சுப்ரமணியன் நாராயணன்.

லைகா புரொடக்ஷன்ஸ் தலைவர் – ஜிகேஎம் தமிழ் குமரன்

Facebook Comments

Related Articles

Back to top button