Spotlightவிமர்சனங்கள்

மேக்ஸ் – விமர்சனம் 3.5/5

யக்குனர் விஜய் கார்த்திகேயா இயக்கத்தில் கிச்சா சுதீப், வரலட்சுமி சரத்குமார், இளவரசு, சம்யுக்தா ஹொர்னாட், சுக்ருதா வாக்லே, சுனில், சரத் லோகிதாஸ்வா, வம்சி கிருஷ்ணா, ஆடுகளம் நரேன் உள்ளிட்ட நடிகர்களின் நடிப்பில் உருவாகி வெளிவந்திருக்கும் படம் தான் இந்த மேக்ஸ்.

இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார் சேகர் சந்திரா. மேலும், இசையமைத்திருக்கிறார் அஜனீஷ் லோக்நாத்.

தயாரித்திருக்கிறார்கள் வி கிரியேஷன்ஸ் & கிச்சா கிரியேஷன்ஸ் நிறுவனங்கள்.

கதைக்குள் சென்று விடலாம்,

தமிழில் வெளிவந்த கைதி படத்தில் நடப்பது போல், ஒருநாள் இரவு காவல்நிலையத்தில் நடக்கும் ஒரு கதை தான் இந்த மேக்ஸ்.

வேறு ஒரு ஊரில் இருந்து வந்த கிச்சா சுதீப், மறுநாள் காலையில் காவல்நிலையத்தில் இன்ஸ்பெக்டராக சார்ஜ் எடுத்துக் கொள்ள வேண்டும். முதல்நாள் இரவில், பெண் போலீஸ் மீது அத்துமீறிய இரண்டு இளைஞர்களை கைது செய்து சிறைக்குள் தள்ளுகிறார் கிச்சா சுதீப்.

சக காவலர்கள் அவர்கள் அமைச்சர்களின் மகன்கள் என்று சொல்ல, எதையும் பொருட்படுத்தாமல் அவர்கள் மீது எப் ஐ ஆர் போட சொல்லிவிட்டுச் சென்று விடுகிறார் சுதீப்.

சக காவலர்கள் உயிருக்கு பயந்து அங்கிருந்து சென்று விட, சிறிது நேரத்திற்குப் பிறகு காவல் நிலையத்திற்கு வரும் காவலர்கள் அதிர்ச்சியில் உறைகின்றனர். சிறையில் அடைக்கப்பட்ட இரண்டு இளைஞர்களும் இறந்து கிடக்கின்றனர்.

இந்த தகவலை கிச்சா சுதீப்பிடம் தெரிவிக்க, அவரும் அதிர்ச்சியில் உறைகிறார். அமைச்சரின் மகன்கள் கைது செய்யப்பட்டதை அறிந்த ரெளடிகள் அவரை தேடி காவல் நிலையம் வருகின்றனர்.

அதன்பிறகு அந்த ஒரு இரவிற்குள் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை.

படத்தின் மிகப்பெரும் பலம் என்றால், அது திரைக்கதை தான். ஒரு இடத்தைத் தவிர படம் முழுக்க அதிவேகமாக சென்ற திரைக்கதை நம்மை எதையும் யோசிக்க விடாமல் செய்து விட்டது.

இந்த வருடத்தில் வெளியான ஒரு முழு நீள ஆக்‌ஷன் படம் என்றால் இதைக் கூறலாம். அப்படியான ஒரு கதையை எடுத்து இயக்கியிருக்கிறார் இயக்குனர்.

மாஸ் & ஆக்‌ஷன் படமாக இப்படம் உருவாகியிருக்கிறது. கிச்சா சுதீப்பின் ரசிகர்களுக்கு இப்படம் ஒரு மாபெரும் விருந்து தான்.

படத்திற்கு பலம் என்றால் அது பின்னணி இசை தான். தரமான ஒளிப்பதிவை கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர். இரவு நேரம் மட்டுமே படம் என்பதால், வெளிச்சத்தை கனக்கச்சிதமாக கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்.

படத்தை ஒட்டுமொத்தமாக தாங்கி நிற்கிறார் கிச்சா சுதீப். ஆக்‌ஷன் காட்சிகளில் தனக்கே உரித்தான் உடல் மொழியில் அனைவரையும் துவம்சமாடும் காட்சி ப்ளஸ்.

இளவரசுவின் கதாபாத்திரம் வலுவானது. அதை அழகாக கொடுத்திருக்கிறார் இளவரசு.

பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவத்திற்கு என்ன செய்ய வேண்டும் என்பதையும் இப்படம் பறைசாற்றியிருக்கிறது.

மேக்ஸ் – மிரட்டல்

Facebook Comments

Related Articles

Back to top button