
தளபதி விஜய்யின் மேனஜராக இருந்து வந்த ஜெகதீஸை அதிரடியாக விஜய் நீக்கி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகரும் இசையமைப்பாளருமான ஜி வி பிரகாஷின் ட்விட்டர் பக்கத்தை கவனித்துக் கொண்டவர் தான் ஜெகதீஸ். இவர், ‘தலைவா’ படப்பிடிப்பின் போது விஜய்யோடு நெருங்கி பழகி, விஜய்க்கென்று ட்விட்டர் பக்கத்தை ஆரம்பித்து,அதையும் அவரே கவனித்து வந்தார்.
இதனைத் தொடர்ந்து விஜய்க்கும் ஜெகதீஸுக்கும் நட்பு நெருங்கியதால், தனது மேனஜராக ஜெகதீஸை வைத்துக் கொண்டார் விஜய்.
இதன் அடுத்த கட்டமாக, மாஸ்டர் பத்தின் இணை தயாரிப்பாளராகவும் ஜெகதீஸை உயர்த்தி வைத்தார் தளபதி விஜய்.
இந்நிலையில், மாஸ்டர் வெளியீட்டில் சில குளறுபடிகள் நடந்ததாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து ஜெகதீஸை தளபதி விஜய் அதிரடியாக நீக்கி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியே வரவில்லை என்றாலும், மறுப்பு தகவலும் விஜய் தரப்பில் தெரிவிக்கப்படாமல் இருப்பதால், தகவல் உண்மையாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.





