Spotlightசினிமா

வேற லெவல் அப்டேட்.. பார்த்திபனின் அடுத்த அதிரடி!

சிங்கிள் நான் லீனியர் படமாக உருவாகியிருக்கிறது பார்த்திபனின் “இரவின் நிழல்”. இப்படம் கடந்த வாரம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

எப்போதுமே தனது படைப்பில் புதுமையை புகுத்தி வரும் பார்த்திபன், தனது அடுத்த படத்திலும் புதுமையை புகுத்தவிருக்கிறார்.

ஆம், தனது அடுத்த படத்தில் எவ்வித கிராபிக்ஸ் காட்சிகள் இல்லாமலும், மனிதர்கள் இல்லாமலும் முழுக்க முழுக்க விலங்குகளை வைத்து படத்தை இயக்கவிருக்கிறாராம் பார்த்திபன்.

இந்த செய்தி வெளியானதிலிருந்து சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவ ஆரம்பித்துவிட்டது.

விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக இருக்கிறது.

Facebook Comments

Related Articles

Back to top button