விமர்சனங்கள்

பூமர காத்து விமர்சனம் 3/5

இயக்குனர் – ஞான ஆரோக்கிய ராஜா

ஒளிப்பதிவு: ஜோ

இசை: அரவிந்த் ஸ்ரீராம், ஈஸ்வர் ஆனந்த்

நடிகர்கள்: விதுஷ், சந்தோஷ் சரவணன், மனிஷா, மனோபாலா, தேவதர்ஷினி, சிங்கம் புலி, முத்துகாளை, போண்டா மணி,

பள்ளி பருவத்தில் நாயகி மீது நாயகனுக்கு காதல் மலர்கிறது. அந்த காதலை காதலியிடம் சொல்ல வரும் நேரத்தில் நாங்கள் அனைவரும் நண்பர்கள் தான் என்று கூறிவிடுகிறார் நாயகி.

இதனால், அந்த காதலை மூடிவிடுகிறார். கல்லூரி முடிந்த பிறகு ஊரில் உள்ள மற்றொரு பெண் மீது காதல் வருகிறது. அப்பெண் விபத்தில் கால் ஊனமாகிவிட, அந்த விபத்திற்கு தான் காரணம் என்று, அப்பெண்ணை திருமணை செய்ய முடிவெடுக்கிறார் நாயகன்.

வீட்டின் எதிர்ப்பையும் மீறி அப்பெண்ணை திருமணமும் செய்து கொள்கிறார். அதன் பிறகு ஹீரோவின் வாழ்க்கை என்னவானது என்பதே படத்தின் மீதிக் கதை.

விதுஷ், சந்தோஷ் சரவணன் என்ற இரண்டு ஹீரோக்களும் கதைக்கேற்ற நடிப்பைக் கொடுத்திருக்கிறார்கள். படத்தின் முதல் பாதியில் மனோபாலா மற்றும் தேவதர்ஷினி இருவருக்குமிடையேயான பள்ளி பருவ காதல் காட்சி படத்திற்கு பலமாக நிற்கிறது. முதல் பாதி வேகமாக நகர, இரண்டாம் பாதியில் சற்று கூடுதல் கவனம் செலுத்தியிருந்திருக்கலாம்.

திருமணத்திற்கு பின்பான வறுமையை கண்களில் ஈரம் எட்டிப் பார்க்கும் அளவிற்கு கொடுத்து மனதை உருக்கியிருக்கிறார் இயக்குனர். காதலிலும் வென்று வாழ்க்கையிலும் வென்று விடலாமா என்பதை சற்று வலி தாங்கிய கதை கொண்டு திரைக்கதை நகர்வதால், ரசிக்கும்படியாக இருக்கிறது.

பின்னணி இசை மற்றும் ஒளிப்பதிவு இரண்டு தூண்களாக வந்து நிற்கிறது.

பூமர காத்து – காதல்

Facebook Comments

Related Articles

Back to top button