
தமிழகத்தில் இன்று முதல் டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறக்கப்படுகின்றன. சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளை தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் டாஸ்மாக் திறக்கப்ப்படவுள்ளது.
மதுபான கடைகளில் கூட்டம் அதிகமாக கூடுவதை தவிர்க்க 7 வண்ணங்களில் டோக்கன் வழங்க தமிழக அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஒரு கடைக்கு நாளொன்று 500 பேருக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்படுகிறது.
சிகப்பு, மஞ்சள், பச்சை, நீலம் என 7 வண்ணங்களில் டோக்கன் அச்சடிக்கப்பட்டுள்ளது. மது வாங்க வருபவர்கள் முக கவசம் அணிந்து கொண்டும் சமூக இடைவெளியை பின்பற்றியும் நடக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இன்று கருநீல டோக்கன் வைத்திருப்பவர்கள் மட்டுமே மதுவாங்க அனுமதிக்கப்படுவார்கள்.
Facebook Comments




