நான்கு காதல் கதைகளை ஒரு படமாக தொகுத்து கொடுத்துள்ளார் இயக்குனர்.
15 வயது காதல்… 25 வயது காதல்… 35 வயது காதல்…. 55 வயது காதல்…
1 அத்தியாயம் பிங்க் பேக்’
2வது அத்தியாயம் ‘காக்கா கடி’
3வது அத்தியாயம் ‘டர்ட்டிள் வாக்’
4வது அத்தியாயம் ‘ஹே அம்மு’
இந்த நான்கு கதைக்கும் நடிகர்களுக்கும் தொடர்பு இல்லை. ஆனால் அன்பு ஒன்றே எல்லாவற்றிலும் தொடராக உள்ளது.
குப்பை கிடங்கில் குப்பை பொறுக்கும் பையனுக்கும் தன் காஸ்ட்லியான மோதிரதை தவற விட்ட ஒரு சிறுமிக்கும் உள்ள ஈர்ப்பு. இது காதல் என்பதை விட ஓர் இனம் புரியாத அன்பு எனலாம்.
2வது கதையில்…
ஓலா கேப் கால் டாக்சியில் பயணிக்கும் கேன்சர் நோயாளி இளைஞனுக்னும் மற்றொரு பெண் (பேஷன் டிசைனர்) இடையே உள்ள கவிதை காதல் இது.
3வது கதையில்…
திருமணமே செய்துக் கொள்ளாமல் காலத்தை கடந்த 55 வயது பெண் ஒருவருக்கும் பேரன் பேத்திகளை பார்த்த ஒருவருக்கும் (மனைவியை இழந்த) உண்டான காதல்.
4வது கதையில்…
கணவன், 2 குழந்தைகள் என இல்லமே சொர்க்கம் என வாழும் சுனைனாவுக்கும்… வேலை உண்டு செக்ஸ் உண்டு என வாழும் சமுத்திரக்கனிக்கும் உள்ள கதை.
இந்த நான்கு கதையில் நடித்த அனைவரையும் நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும். யதார்த்தமான நடிப்பை கொடுத்துள்ளனர்.
இந்த கேரக்டர்களில் நடித்த சமுத்திரக்கனி, சுனைனா, மணிகண்டன், லீலா சாம்ஸன், நிவேதிதா சதீஷ், க்ரவ்மகா ஸ்ரீராம், சாரா அர்ஜுன், ராகுல் என அனைவருமே கச்சிதம்.
ஒரே பாட்டு வைத்த இசையமைப்பாளரை பாராட்டியே ஆக வேண்டும்.
அபிநந்தன் ராமானுஜம், மனோஜ் பரமஹம்சா, விஜய் கார்த்திக் கண்ணன், யாமினி ஞானமூர்த்தி என ஒவ்வொரு கதைக்கும் ஒவ்வொருவர் நான்கு பேர் ஒளிப்பதிவு செய்துள்ளனர். காட்சிகள் எல்லாம் கலர்புல்.
இயக்குநர் ஹலிதாவே எடிட்டிங் செய்துள்ளதால் எங்கும் பெரிதாக போராடிக்கவில்லை.
கார் காதலில்…. கட்டி இருக்குறவனுக்கு எப்படி கட்டு கொடுப்பாங்க…
30 வருச தாம்பத்தியத்தில் எவ்வளவு கஷ்டம் வந்தாலும் நாம எதையும் வீசி எறிய மாட்டோம். ஆனால் இப்போ அப்படியில்லை…
இருட்டுல இன்பம.. வெளிச்சத்துல வெறுமை… இப்படி பல வசனங்கள் நிச்சயம் நம்மை கை தட்ட வைக்கும்.
நாலு குறும்படங்களை பார்த்த உணர்வு வருவதால் ஒரு முழு படமாக தெரியவில்லை. அதை இயக்குநர் ஹலிதா ஷமீம் தவிர்த்திருக்கலாம்.
ஏதாவது ஒரு விசயத்தில் இவர்களை தொடர்புப்படுத்தியிருக்கலாம்.
ஆக.. சில்லுக் கருப்பட்டி… திகட்டாத சுவை (அன்பு)
Sillu Karupatti review