
சன் பிக்சர்ஸ் நிறுவனம் அடுத்தடுத்த படத்தை தயாரிக்கவுள்ளது. இதற்காக சுமார் 1000 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பேட்ட, காஞ்சனா 3, நம்ம வீட்டு பிள்ளை என அடுத்தடுத்து 3 படங்களை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகப்பெரும் வசூலையும் வாரிக் குவித்தது.
ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தை மிகவும் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.
இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து பிரம்மாண்டமான படங்களை தயாரிக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
விஜய் 65, அரண்மனை 3, சந்திரமுகி 2, தனுஷுடன் ஒரு படம், சிவகார்த்திகேயனுடன் ஒரு படம், விஜய் சேதுபதியுடன் ஒரு படம் என நீண்டு கொண்டே செல்கிறது.
இதற்காக மொத்தமாக சுமார் 1000 கோடி வரை சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஒதுக்கி வைத்துள்ளதாம்.,
Facebook Comments





