Spotlightவிமர்சனங்கள்

இரவின் நிழல் – விமர்சனம் 3.5/5

பார்த்திபன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி நடித்திருக்கும் படம் தான் “இரவின் நிழல்”. எப்போதும் தனது படங்களுக்கு தனி முத்திரையை தமிழ் சினிமாவில் பதித்து வரும் பார்த்திபன், இப்படத்திலும் உலகமே வியக்கும் வண்ணம் ஒரு முத்திரையை பதித்திருக்கிறார்.

தொடர்ச்சியாக 96 நிமிடங்கள் எந்தவொரு கட்-டும் இல்லாமல் ஒரு படத்தை இயக்கி முடித்து சாதனை படைத்திருக்கிறார்.

படத்தின் ஆரம்பத்தில் படத்தின் மேக்கிங்க் வீடியோ திரையிடப்படுகிறது. அந்த மேக்கிங் வீடியோ பார்த்தால் மட்டுமே பார்த்திபனின் இந்த அசாத்திய முயற்சி நம் கண்களை வியப்பட வைக்கும்.

கதைப்படி,

மிகப்பெரும் சினிமா விநியோகஸ்தரராக வருகிறார் பார்த்திபன். கந்துவட்டி கொடுமையால் குடும்பம் தற்கொலை செய்து கொள்ள, அதற்கு காரணமான பார்த்திபனை கைது செய்ய விரைகிறது போலீஸ்.

தான் இருக்கும் இடத்தில் இருந்து எஸ்கேப் ஆகும் பார்த்திபன், ஒரு பாழடைந்த இடிந்த மண்டபத்திற்குள் செல்கிறார். அங்கு, தான் சிறுவயதில் ஆரம்பித்து பெரியவனாக வரும் வரை இருந்த அனுபவங்களை ப்ளாஷ் பேக்காக நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார். இறுதியாக என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை.

ஆனந்த் கிருஷ்ணன், சந்துரு, பிரவீன் குமார், ஜோஷுவா உள்ளிட்டவர்கள் பார்த்திபனின் 10 வயது முதல் 40 வயது நாயகன் வரை நடித்திருக்கிறார்கள். ஒவ்வொருவரும் தனது பணியை நன்றாக செய்து முடித்திருக்கிறார்கள். சிறப்பாக பயிற்சி பெற்று கடுமையாக உழைத்து தனது திறமையை நிருபித்திருக்கிறார்கள் ஒவ்வொருவரும்.

நாயகிகளாக பிரிகிடா சகா, சாய் பிரியங்கா ரூத், சிநேகா குமாரி என மூவர் நடித்துள்ளனர். மூவருமே ஒருவருக்கொருவர் போட்டிப் போட்டுக் கொண்டு நடித்து முத்திரை பதித்திருக்கிறார்கள்.

தமிழ் சினிமாவில் உண்மையான முகங்கள் சிலரை பார்த்திபன் நேரடியாகவே தாக்கியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல், ரோபோ சங்கர் மற்றும் வரலட்சுமியின் நடிப்பை பாராட்டலாம்.

பார்த்திபனின் முயற்சியை நாம் பெரிதாக பாராட்டித் தான ஆக வேண்டும். இப்படியொரு பயிற்சியை கொடுத்து இப்படியொரு டீமை வைத்து கடுமையாக உழைத்து ஒரு நல்ல படைப்பை படைத்திருக்கிறார்.

கதையில் சிறிது நாம் ஏமாற்றம் அடைந்தாலும், எடுக்கப்பட்ட விதத்திற்காக இப்படத்தை நாம் கொண்டாடியே ஆக வேண்டும். உலக சினிமாவில் நமது உள்ளூர் சினிமாவின் முத்திரையை “இரவின் நிழல்” கொண்டு பதிக்கலாம்.

ஒளிப்பதிவு ஆர்தர் வில்சன்…
இசை : ஏஆர்.ரஹ்மான்..
கலை : விஜய்முருகன்.

இவர்கள் மூவரும் படத்திற்கு மிகப்பெரும் பலம் தான். சிங்கிள் ஷாட் படம் என்பதால் கலைக்கான பங்கு இப்படத்தில் அதிகமாகவே தேவைப்பட்டிருக்கிறது. அதையும் சிறப்புற கொடுத்திருக்கிறார் விஜய் முருகன்.

படத்தில், இக்கதையின் மூலக் கதாபாத்திரமான பார்த்திபனின் கேரக்டரை பல வேதனைகள், வலிகளை தாங்கி நிற்பதால் தனது கோபத்தையும் ஆக்ரோஷத்தையும் காட்டும் போது பல இடங்களில் கெட்ட வார்த்தைகள் பயன்படுத்தினால் அதன் உண்மைத் தன்மை அறிய முடியும். சென்சார் இந்த வார்த்தைகளை மியூட் செய்வதால் அதன் வீரியம் சற்று குறைய தான் செய்யும்…

பார்த்திபனின் இந்த அசாத்திய சாதனையை தமிழக சினிமா மட்டுமல்ல உலக சினிமாவும் கொண்டாடும்…

இரவின் நிழல் – தமிழ் சினிமாவை வானுயர வைத்த பெருமைக்குறியவர் இரா பார்த்திபன்….

Facebook Comments

Related Articles

Back to top button