
சார்லி, மைம்கோபி, மரியம் ஜார்ஜ் மூவரும் ஒரே பகுதியில் அடுத்தடுத்து வீடுகளில் வசிக்கின்றனர். இவர்கள் கல் உடைக்கும் தொழிலை செய்து வருகின்றனர்.
இவர்கள் தங்கள் வறுமையிலும் மகன்களை நன்றாக படிக்க வைக்க கடுமையாக உழைக்கின்றனர்.
ஆனால் மகன்களோ பள்ளிக்கு செல்லாமல் குறும்புத்தனம் செய்வது ஊர் பிரச்சினைகளை கொண்டு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
இதனால் ஊர்க்காரர்கள் இந்த பெற்றோர்களை கண்டிக்க, சார்லி, மைம்கோபி, ஜார்ஜ் ஆகியோர் தங்கள் மகன்களை அடித்து உதைக்கின்றனர்.
இதனால் வெறுப்படையும் 3 சிறுவர்கள் சென்னைக்கு ஓடி அங்கு நிறைய சம்பாதித்து பிறகு ஊருக்கு வந்து கெத்தாக வாழ வேண்டும் என நினைக்கின்றனர்.
ஆனால் சென்னையில் ஒரு தாதாவிடம் சிக்கும் இவர்கள் தங்களை வாழ்வை இழக்கின்றனர். அதில் இருந்து எப்படி மீண்டார்கள்? குடும்பத்துடன் சேர்ந்தார்களா? என்பதே மீதிக்கதை.
பெரிய காக்கா முட்டை ரமேஷ், நஷத், கோகுல் ஆகிய மூவரும் சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளனர். இவர்கள் செய்யும் சின்ன சின்ன சேட்டைகள் கூட ரசிக்க வைக்கின்றன.
இதில் ரமேஷ், நஷாத் இருவரும் அதிகளவில் ஸ்கோர் செய்துள்ளனர். சென்னையில் படும் கஷ்டங்களை பார்க்கும் போதே நம் கண்கள் கலங்கும்.
சார்லி, மைம்கோபி, ஜார்ஜ் ஆகிய மூவரும் யதார்த்த ஏழை தந்தைகளாக வாழ்ந்திருக்கின்றனர்.
இவர்களுடன் தர்ஷினி, நாகவேந்திரா சிரஞ்சீவி, பிருந்தா, அரவிந்த் காந்த், வினோத், அபிராமி ஆகியோரும் நடிப்பில் கச்சிதம். தங்கள் கேரக்டரை உணர்ந்து நடித்துள்ளனர்.
இந்த படத்தை எழுதி இயக்கியிருப்பவர் ராஜவேல் கிருஷ்ணா.
ஒளிப்பதிவு : பாக்கி என்பவர் செய்துள்ளார்.
இசை பணிகளை பைசல் என்பவர் மேற்கொண்டுள்ளார்.
மூவரும் தங்களின் பங்களிப்பை சிறந்த முறையில் கொடுத்துள்ளனர்.
கிராமத்து காதலர்கள் காட்சிகள் முழுமையாக இல்லை. அதை டைரக்டர் கவனித்திருக்கலாம். நகரத்து காதலில் சாதியை சாடியிருப்பது சிறப்பு.
பெற்றோர் பேச்சை கேட்காத பிள்ளைகள் வாழ்வில் படும் கஷ்டங்களை நன்றாக காட்டியுள்ளார்.
மேலும் கல்வியில்லாத வாழ்க்கை உப்பு இல்லாத உணவை போன்றது என்பதையும் ஆணித்தரமாக சொன்ன இயக்குனர் ராஜவேல் கிருஷ்ணாவை வெகுவாக பாராட்டலாம்.
Pizhai movie review





