
கோபிநாத் இயக்கத்தில் வெற்றி கதாநாயகனாக நடித்து வெளிவந்த படம் தான் ‘ஜீவி’. இப்படம், பத்திரிக்கைகளாலும் பொதுமக்களாலும் பெரிதளவிலும் கொண்டாடப்பட்டது. பல நட்சத்திரங்களும் இப்படத்தை புகழ்ந்து வருகின்றனர்.
நடிகர் விவேக், இப்படத்தை பார்த்து புகழ்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் படக்குழுவினருக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
அதில், ”ஜீவி படம் பார்த்தேன். சாதாரணமாக ஆரம்பிக்கும் கதை போகப் போக நம்மை ஆட்கொள்கிறது. வித்தியாசமான படங்களைத் தேடும் ரசிகர்களுக்கு, ஜீவி ஒரு வெறித்தனமான தீனி! இயல்பாக நடிக்கும் ஹீரோ, கவனிக்க வைக்கும் வசனம், துணிச்சலான இயக்குனர்!” என்று கூறியுள்ளார்.
Facebook Comments





