
தமிழகம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இன்னும் எத்தனை நாட்கள் இப்படி தண்ணீர் பஞ்சத்தில் தமிழகம் தத்தளிக்கப்போகிறது என்பது வெளிச்சம் தான்.
ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் தான் ஏரிகளை தூர்வாராமல், ஆக்கிரமிப்பிற்கு ஒத்துளைப்பு கொடுத்தும் தமிழகத்தை பாலைவனமாக்கியுள்ளனர் என்று மக்கள் அவர்கள் மீது கோபத்தில் இருக்கின்றனர்.
இந்நிலையில், தமிழக ஐஏஎஸ் அதிகாரி சகாயம் அளித்த பேட்டியில், ‘தண்ணீர் பிரச்சினைக்கு அரசின் மெத்தனமே காரணம்.
சென்னையை சுற்றியுள்ள 1,500 ஏரிகளை சீரமைக்க 20 ஆண்டுகள் முன்பே பரிந்துரை செய்தேன், ஆனால் அரசு சீர்செய்யவில்லை. இதை எங்கு கொண்டு முறையிடுவது.’ என்று கூறியுள்ளார்.
Facebook Comments




