
மறைந்த சுரேஷ் சங்கையா அவர்களின் எழுத்து மற்றும் இயக்கத்தில் யோகி பாபு, லவ்லின் சந்திரசேகர், ரைச்சல் ரபேக்கா, ராமகிருஷ்ணன் உள்ளிட்ட நடிகர்களின் நடிப்பில் உருவாகி வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் கெணத்த காணோம்.
படத்தினை ரமேஷ்பாபு & ஜெகன் பஷீகரன் இருவரும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். தியாகராஜன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்திருக்கிறார். ராமர் படத்தொகுப்பு செய்திருக்கிறார். படத்தினை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் ரிலீஸ் செய்திருக்கிறது.
வறட்சியை மட்டுமே கண்டுகொண்டிருக்கிற கிராமம் அது. இராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு கிராமம். மழை பொய்த்து போனதால், அரசாங்கத்திடம் குடிநீருக்காக கையேந்தி நிற்கிறது.

இதனை தொடர்ந்து கிராம மக்கள் ஒன்றாக இணைந்து ஒரு கிணறு வெட்டலாம் என்று முடிவு செய்கின்றனர். அந்த கிணற்றினை யோகிபாபுவின் வீட்டு இடத்தில் தோன்றுகின்றனர். சுமார் 6 அடி தோண்டும் போது அங்கு மிகப் பெரும் எலும்புகள் கிடைக்கின்றன. இதனால் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அந்த இடத்திற்கு வருகின்றனர். அந்த இடத்தினை தங்கள் வசப்படுத்தி, அதனை அந்த எலும்புகளை ஆராய்ச்சி செய்கின்றனர்.
அந்த எலும்புகளானது பல வருடங்களுக்கு முன்பு அழிந்து போன இனமான டைனோசர்ஸ் இனத்தின் எலும்பு துண்டுகள் என்று கண்டறிகின்றனர்.
அதன் பிறகு அந்த கிராமம் என்ன ஆனது.? கிராம மக்களின் கனவு நனவானதா இல்லையா என்பதே படத்தின் மீதி கதை..

இந்த கதையில் யோகிபாபு தான் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்றில்லை. ஆனால், ஒரு நல்ல படத்தில் தானும் ஒரு அங்கமாக இருந்தால் நன்றாக இருக்கும் என்ற ஒரே எண்ணத்தில் தான் இந்த படத்தில் தன்னை இணைத்திருக்கிறார் யோகிபாபு. ஊர் கோவிலின் பூசாரியாக வரும் யோகிபாபு, தனது கேரக்டரை அளவாக செய்துமுடித்திருக்கிறார்.
மற்ற நடிகர்களையெல்லாம் நடிக்க வைத்து ரசித்ததற்காகவே யோகிபாபுவிற்கு மிகப்பெரும் வாழ்த்துகளை கூறிக் கொள்ளலாம். முழுக்க முழுக்க காமெடிக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து இந்த படம் உருவாகி இருக்கிறது.

யோகி பாபுவிற்கு ஜோடியாக லவ்லின் சந்திரசேகர், தொல்பொருள் ஆராய்ச்சியாளராக ரேச்சல் ரபேக்கா மற்றும் ராமகிருஷ்ணன் மாவட்ட கலெக்டராக ஜார்ஜ் மரியம், அமைச்சராக கவிதா பாரதி என அனைவருமே தங்களது கதாபாத்திரத்தை மிகவும் நேர்த்தியாக செய்து முடித்தனர்.
படத்தின் மிகப்பெரும் பில்லர்களே அந்த கிராமத்தில் கிராமத்துவாசியாக நடித்து நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைத்த கிராமத்து ஆட்கள் மட்டும் தான். கிராமத்தில் வசிப்பவர்களாகவே மாறிப் போன நடிகர்கள் அனைவருமே படத்திற்கு பெரிதாக கைகொடுத்திருக்கின்றனர்.
மண் சார்ந்த கதையை இயக்கும்போது அந்த மண் சார்ந்த நடிகர்களை வைத்து அந்த படத்தை இயக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்திருக்கிறார் இயக்குனர்.

இந்த படத்தில் ஹலோ காந்தசாமியை அவர்களின் உழைப்பு அளப்பரியது. அவரின் ஒவ்வொரு கவுண்டர்களும் திரையரங்கில் சிரிப்பலையை வர வைத்திருக்கிறது. பட்ஜெட் படமாக செல்லும் பல படங்களின் இவரின் உழைப்பைக் காண முடிகிறது. வாழ்த்துகள் ஹலோ கந்தசாமிக்கு…
ஊராட்சி மன்ற தலைவர், யோகிபாவின் தாத்தாவாக வருபவர், நடக்க முடியாமல் ஊர்ந்து விழுந்து செல்லக்கூடிய முதியவர், அந்த முதியவருக்கு தகவல் தெரிவிக்கும் நபர், உயரம் குறைந்த நபர், நடு நடுவே வந்து ஒரு பாடலை பாடிச் செல்பவர், யோகிபாபுவின் அக்கா, மீசைக்கார பெரியவர் என படத்தில் நடித்த அனைத்து கதாபாத்திரங்களும் ஏதோ ஒரு விஷயத்தை தொடர்ச்சியாக சொல்லிவிட்டுசென்றிருக்கின்றனர்.
நிவாஸ் கே பிரசன்னாவின் இசை படத்திற்கு நல்லதொரு பலத்தைக் கொடுத்திருக்கிறது. தியாகராஜனின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிதாகவே கை கொடுத்திருக்கிறது. ராமரின் படத்தொகுப்பு ஷார்ப்பாக இருக்கிறது.
சிரிப்புக்கு இவங்க கேரண்டி…





