
கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து தமிழக மக்களுக்கு முதல்வர் பழனிசாமி உரை நிகழ்த்தி வருகிறார்.
தமிழக முதலமைச்சராக இல்லாமல், உங்கள் குடும்பத்தில் ஒருவனாக பேசுகிறேன்.
பொறுப்பான குடிமக்களாக இருந்து சமூதாயத்தை காப்போம்.
21 நாள் ஊரடங்கு என்பது விடுமுறை அல்ல.
இது உங்கள் குடும்பத்தை பாதுகாக்கும் அரசின் உத்தரவு
கொரோனாவை விரட்டியடிக்க உறுதி ஏற்போம்.
கொரோனா வைரஸ் காட்டுத்தீ போல் உலகம் முழுவதும் பரவி வருகிறது
மருத்துவமனைகளில் படுக்கை எண்ணிக்கையை அதிகரிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கும், மக்கள் அச்சப்பட வேண்டாம்.
சமூக விலகலை கடைபிடியுங்கள்.
ஏப்ரல் மாதம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரேசன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும்.’ என்று நெகிழ்ந்து கூறினார்.
Facebook Comments





