Spotlightசினிமா

நயன்தாரா படத்திற்கு நான் இசையமைக்கவில்லை – யுவன் எஸ்கேப்!

சக்ரி டோலட்டி இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் படம் கொலையுதிர் காலம். இந்தப் படத்தை பூஜா என்டெர்டெயின்மென்டுடன் இணைந்து, எட்ஸெட்ரா என்டெர்டெயின்மென்ட் தயாரித்துள்ளது.

முன்னதாக இந்த படத்தை ஆரம்பத்தில் யுவன் ஷங்கர் ராஜா, பாலிவுட்டின் பிரமாண்ட தயாரிப்பு நிறுவனமான பூஜா என்டர்டெயின்மென்ட்ஸுடன் இணைந்து படத்தைத் தயாரிப்பதாக இருந்தது. பின்பு பல காரணங்களால் படத்தை முடிக்காமலேயே யுவன் தயாரிப்பை கைவிட்டார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் படத்தின் இயக்குனர் சக்ரி இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இல்லாமல் ஒரு டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. டிரய்லர் வெளியான சில மணிநேரத்தில் படத்துக்கு நான் இசையமைக்கவில்லை என யுவன் சங்கர் ராஜா டிவீட் ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.

இதனால், இவர்களுக்குள் என்னவிதமான பிரச்சனை நிலவுகிறது என்பது குழப்பமாகவே உள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button