
இயக்கம்: பித்தாக் புகழேந்தி
நடிகர்கள்: துருவன் மனோ, மீனாட்சி கோவிந்தராஜ், R K சுரேஷ், பாடகர் மனோ, ஆடுகளம் நரேன், வித்யா பிரதீப், வண்ண வண்ண பூக்கள் வினோதினி R K வரதராஜ், முருகானந்தம், Vijay TV சரத், ஜார்ஜ் விஜய், கபாலி விஷ்வந்த்,பாத்திமா பாபு
இசை: மாரிஸ் விஜய்,
ஒளிப்பதிவு: M. A. ஆனந்த்
தயாரிப்பு: MPR FILMS A. மதியழகன், வீரம்மாள் & SKYLINE CINEMAS R.M. ராஜேஷ்
கதைப்படி,
கொடைக்கானலில் அழகிய வனப்பகுதி தான் வட்டக்கானல். இப்பகுதியானது அழகிய சூழலுக்கு பிரபலம் என்பதை விட, அங்கு விளையும் போதை காளானுக்கு தான் பிரபலம் என்று சொன்னால் மிகையாகாது.
ஆம், அந்த போதை காளைனை வைத்து பல கோடிக்கு சம்பாதித்து அப்பகுதியை தனது கண்ட்ரோலில் வைத்திருக்கும் வில்லனாக வருகிறார் ஆர் கே சுரேஷ்.
இவரது, அடிதடி வேலைகளை செய்வதற்கென்று மூன்று பேரை சிறுவயதிலிருந்தே மகன் போல் வளர்த்து வருகிறார் ஆர் கே சுரேஷ். அந்த மூவர், துருவன் மனோ, கபாலி விஸ்வந்த், விஜய் டிவி சரத் .
இவர்களே ஆர் கே சுரேஷுக்கு காவலர்களாக வருகின்றனர். தனது கணவனை கொன்று சொத்தை அபகரித்ததற்காக 20 வருடங்களாக ஆர் கே சுரேஷை பழி வாங்க காத்திருக்கிறார் வித்யா பிரதீப்.
தனது பரம்பரை சொத்தான, மிகப்பெரும் எஸ்டேட்டை அங்கு வேலை பார்க்கும் ஏழைகளுக்கு கொடுத்து விட வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் தனது பணிகளை செய்து வருபவர் நாயகி மீனாட்சி கோவிந்தராஜ்.
இதற்கு முட்டுக்கட்டை போட்டு நிற்கிறார் ஆர் கே சுரேஷ். இந்த சம்பவத்திற்குள் நாயகன் துருவன் மனோ எப்படி உள்ளே வந்தார்.? சொத்தை பகிர்ந்து கொடுக்கும் மீனாட்சி கோவிந்தராஜின் எண்ணம் என்னவானது.? வித்யா பிரதீப்பின் திட்டம் பழித்ததா.,? உள்ளிட்ட கேள்விகளுக்கு சின்ன சின்ன ட்விஸ்ட் காட்சிகளோடு விடை வைத்திருக்கிறார் இயக்குனர்.
நாயகன் துருவன் மனோ, கதைக்கு ஏற்ற கதாநாயகனாக தோற்றமளிக்கிறார். இருந்தாலும் உடலை குறைத்து நடிப்பில் சற்று கவனம் செலுத்தி கதாபாத்திரத்தை இன்னும் சற்று தூக்கி பிடித்து நடித்திருந்தால் காட்சி இன்னும் உயிரோட்டமாக இருந்திருக்கும். இயக்குனர் சொல்வதை மட்டுமல்லாமல், தன்னால் அந்த கதாபாத்திரத்திற்கு என்ன மாதிரியான உயிரோட்டத்தை கொடுக்க முடியும் என்பதை உணர்ந்து நடித்திருந்தால் இன்னும் காட்சிகள் பலமாக இருந்திருக்கலாம்.
மீனாட்சி கோவிந்தராஜின் நடிப்பை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும். ஒவ்வொரு காட்சியிலும் நம்மை ஏங்க வைக்கும் நடிப்பைக் கொடுத்து அசத்தியிருக்கிறார். க்ளைமாக்ஸ் காட்சியில் கண்களில் ஈரம் கொண்டு வர வைத்துவிட்டார்.
வில்லனாக தனது பங்களிப்பை மிகச்சரியாக செய்துமுடித்திருக்கிறார் ஆர் கே சுரேஷ். தனது உடல் மொழியில் தான் ஒரு அனுபவ நடிகர் என்பதை காட்சிக்கு காட்சி நிரூபித்திருக்கிறார்.
மற்றபடி, பாடகர் மனோ, ஆடுகளம் நரேன், வித்யா பிரதீப், வண்ண வண்ண பூக்கள் வினோதினி R K வரதராஜ், முருகானந்தம், Vijay TV சரத், ஜார்ஜ் விஜய், கபாலி விஷ்வந்த்,பாத்திமா பாபு உள்ளிட்ட நடிகர்களும் தங்களது பங்களிப்பை அளவாக கொடுத்திருந்தனர்.
போதைகாளானை வைத்து சம்பாதித்து பெரும் ரவுடியான ஆர் கே சுரேஷின் வாழ்வை மட்டுமே படத்தில் முன்னிறுத்தி கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குனர். போதைகாளானை பற்றிய விழிப்புணர்வை படத்தின் வாயிலாக கடத்த சற்று தவறியிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.
ரிப்பீட் வசனங்களை தவிர்த்திருந்திருக்கலாம்.
இருந்தாலும், ஒரு புதுவிதமான கதைக்களம், அழகிய மலைபிரதேச வாழ்வியலை காண வேண்டுமென்றால் நிச்சயம் இப்படத்தை ஒருமுறை விசிட் அடிக்கலாம்.
ஒளிப்பதிவும் இசையும் படத்திற்கு பெரிதளவில் கைகொடுத்திருக்கிறது.
வட்டக்கானல் – ரவுடியின் எழுச்சி வீழ்ச்சி..





