
விஜய் நடித்த பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை சாய்ராம் கல்லூரியில் நடைபெற்றது.
இவ்விழாவில் பங்கேற்கும் ரசிகர்களுக்கு தயாரிப்பு நிறுவனம் டிக்கெட்டுகளை விநியோகம் செய்திருந்தது. ஆனால் இருக்கும் இருக்கைகளை விட மிக அதிக அளவில் டிக்கெட்டுகளை விநியோகம் செய்துள்ளனர்.
இதனால் ரசிகர்களில் பலர் டிக்கெட் இருந்தும் உள்ளே செல்ல முடியாமல் இருந்துள்ளனர். கூட்டம் கட்டுக்கடங்காமல் போனதால் போலீசார் அவர்களை தடியடி நடத்தி கலைத்தனர். இதனால் தயாரிப்பு நிறுவனம் மீது ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
இதை கேள்விபட்ட விஜய்யும் தயாரிப்பு நிறுவனம் சரியாக ஏற்பாடுகளை செய்யவில்லை என்று வருத்தத்தில் இருக்கிறார். ரசிகர்கள் மீது தடியடி நடந்ததால் கடும் கோபத்தில் இருக்கிறாராம் விஜய்.
Facebook Comments





