
மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிப்பில் மிகப்பெரும் வெற்றி பெற்ற படம் தான் ‘துப்பறிவாளன்’.
இப்படத்தினைத் தொடர்ந்து ‘துப்பறிவாளன் 2’ படத்தினை எடுக்க விஷாலும் மிஷ்கினும் முடிவு செய்தனர்.
விஷால் தனது விஷால் பிலிம் பேக்டரி மூலமாக இப்படத்தை தயாரிக்கவும் முடிவெடுத்தார்.
படத்தின், முதற்கட்ட படப்பிடிப்பு இலண்டனில் நடைபெற்ற நிலையில் தான், மிஷ்கின் இயக்கத்தில் உருவான ‘சைக்கோ’ வெளியானது.
சைக்கோ மிகப்பெரும் வெற்றி பெற்றதாக கூறிக் கொண்ட மிஷ்கின், ‘துப்பறிவாளன் 2 படத்தின் சம்பளத்தை தனக்கு ஏற்றி தர வேண்டும் என்று விஷாலிடம் முரண்டு பிடித்துள்ளார் மிஷ்கின்.
அதுமட்டுமல்லாமல், முதற்கட்ட படப்பிடிப்பில் திட்டமிட்ட பட்ஜெட்டை விட அதிகமான பட்ஜெட்டிற்கு இழுத்து சென்றுவிட்டாராம் மிஷ்கின். நேரத்திற்கு படப்பிடிப்பிற்கு வராம இருப்பது, லொகேஷன் செலக்ஷன் என அதிகமான தொகையை இழுத்துவைத்து விட்டாராம் மிஷ்கின்.
இதனால், கடுப்பான விஷால், மிஷ்கினை இப்படத்தில் இருந்து நீக்கியிருப்பதாக தகவல் வெளியுள்ளது.
மேலும், மீதி படத்தை விஷாலே இயக்கவிருப்பதாகவு தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என தெரிகிறது.