
தேசிய விருது பட இயக்குனர் அம்ஷன் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ளது ‘மனுசங்கடா’. பல உலகத் திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பெரும் பாராட்டினை இப்படம் பெற்று வருகிறது.
மத்திய அரசால் கோவாவில் ஆண்டுதோறும் நடத்தப்படும் உலகத் திரைப்பட விழாவில் சென்ற ஆண்டு திரையிடப்பட்ட ஒரே தமிழ்ப் படம் இது. புகழ் பெற்ற கெய்ரோ உலகத் திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டது.
ராஜீவ் ஆனந்த், சசிகுமார், மணிமேகலை,ஷீலா, விதுர், ஆனந்த் சம்பத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு: பி.எஸ்.தரன், இசை: அரவிந்த் – சங்கர். பாடல்: இன்குலாப். படத்தொகுப்பு: தனசேகர்.
தயாரிப்பு: தாரா, கண. நட்குணன்.
‘பரியேறும் பெருமாள்’ படத்தை போன்றே பல பரபரப்பான உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு தீண்டாமைக் கொடுமைகள் பற்றி எடுக்கப்பட்ட இப்படம் வரும் அக்டோபர் 12-ஆம் தேதி வெளியிடப்பட இருக்கிறது.





