
சன் டிவியில்ஒளிபரப்பாகி வரும் சீரியல் கல்யாண வீடு. மெட்டி ஒலி புகழ் திருமுருகன் இந்த சீரியலை தயாரித்து சன் டிவியில் ஒளிபரப்பி வருகிறார். இந்த நிலையில் கடந்த மே மாதம் 14 மற்றும் 15ந் தேதிகளில் ஒளிபரப்பான எபிசோட்களால் பிரச்சனை உருவாகி இருக்கிறது.
இந்த சீரியலில் ரோஜா எனும் கேரக்டரில் நடித்து வரும் நடிகை ஒருவர் கூலிப் படையினரை அணுகி தனது தங்கையை கதற கதற கற்பழிக்கணும் என்று கூறுகிறார். மேலும் என் தங்கச்சிக்கு இன்னும் கல்யாணம் ஆகல, அவ கன்னிப் பெண் அதனால அவள் மீது இரக்கமே காட்டக்கூடாது என்றும் ரோஜா சொல்கிறார்.
மேலும் நீங்க அவளை மிக கொடூரமாக கற்பழிக்கணும் அப்படீன்னு ரோஜா தெரிவிக்கிறார். இதனை ஏற்று கூலிப்படை தலைவர் முதலில் ரோஜாவின் தங்கையை கதற கதற கற்பழிக்கிறார். பிறகு அவனது கூலிப்படையில் உள்ளவர்களும் கற்பழிக்கின்றனர்.

மிகவும் ஆபாசமாகவும் அறுவெறுப்பாகவும் இந்த இரண்டு எபிசோட்கள் இருந்ததாக பொதுமக்களிடம் இருந்து புகார் வந்தது. மேலும் தொலைக்காட்சிகள் மீது புகார் அளிக்கும் த பிராட்கேஸ்டிங் கன்டென்ட் கம்ப்ளய்ன்ட் கவுன்சிலிலும் பலர் புகார் அளிச்சாங்க.
இதன் அடிப்படையில் சீரியலை ஒளிபரப்பிய சன் டிவி மற்றும் தயாரித்த திரு பிக்சர்க்கு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டது.
இருவரும் கொடுத்த விளக்கம் திருப்திகரமாக இல்லை. எனவே சன்டிவி அப்படி ஆபாசமா காட்சிகளை ஒளிபரப்பியதற்காக 2.5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருக்குது.





