Spotlightசினிமா

அமைச்சரின் பாராட்டைப் பெற்ற ‘சாக்லேட்’ குறும்படம்!

றிமுக இயக்குனர் லாவன்யா நான்ஸி இயக்கத்தில் நட்டி (எ) நட்ராஜ் , காயத்ரி, தேஜஸ்வினி, மற்றும் தீக்‌ஷனா நடிப்பில் உருவாகியிருக்கும் குறும்படம் தான் ‘சாக்லேட்’.

இந்த குறும்படத்தினை தயாரித்திருக்கிறார் தினமலர் கவிதா. குழந்தைகளின் பாலியல் துன்புறுத்தலை மையமாக வைத்து, ஒரு விழிப்புணர்வுக்காக உருவாக்கப்பட்ட இக்குறும்படம் நேற்று பிரபலங்கள் பலர் முன்னிலையில் சென்னையில் வெளியிடப்பட்டது.

தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மாண்புமிகு. திரு. கடம்பூர் ராஜு இவ்விழாவில் கலந்து கொண்டு குறும்படத்தை வெளியிட்டார். உடன், விருகை என் ரவி (MLA), தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ், இயக்குனர் ஆர் வி உதயகுமார், நடிகை தன்ஷிகா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு, ‘ இதை ஒரு குறும்படமாக பார்க்காமல், தமிழகத்திற்கு தற்போதைக்கு தேவையான ஒரு விழிப்புணர்வு பாடமாக பாருங்கள். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் மீது தனிகவனம் செலுத்துங்கள்.

இப்படத்தை இயக்கிய, தயாரித்த, நடித்த, அனைவருக்கும் எனது பாராட்டுக்கள். ‘ என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய தயாரிப்பாளர் கவிதா , ‘ நான் எப்போதுமே சமூகம் சார்ந்த படத்தை மட்டுமே தயாரிப்பேன். இக்குறும்படத்தை தயாரிக்க உதவிய தினமலர் மற்றும் நடிகர் ஜி வி பிரகாஷ் அவர்களுக்கு எனது நன்றிகள். மேலும், வந்திருந்து வாழ்த்திய அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.’ என்று கூறினார்.

இதோ அந்த குறும்படம் …

Facebook Comments

Related Articles

Back to top button