
எஸ் பி ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஸ்ருதி ஹாசன் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் தான் ‘லாபம்’.
கதைப்படி, பக்கிரி கதாபாத்திரத்தில் தோன்றும் விஜய் சேதுபதி பல வருடங்களுக்குப் பிறகு தனது கிராமத்திற்கு திரும்புகிறார்.
ஊரில் நடைபெற்ற விவசாயிகள் சங்கத் தேர்தலில் போட்டியிடுகின்றனர் விஜய்சேதுபதியும் அவரது நண்பர்களும்.
அதுவரை விவசாயிகள் சங்க தலைவராக இருந்த ஜெகபதி பாபு, தான் போட்டியிடப்போவதில்லை என அறிவித்து வெளியேறிவிடுகிறார். விஜய்சேதுபதியும் அவரது நண்பர்களும் வெற்றி பெறுகின்றனர்.
விவசாயிகளுக்கு நல்லது படைக்கும் பல திட்டங்களை விஜய் சேதுபதி கொண்டு வருகிறார். அதை கெடுக்க பல தடைகளை கொண்டு வருகிறார் ஜெகபதிபாபு.
இறுதியில் தனது விவசாய கிராமத்தை கார்ப்பரேட் கம்பெனிக்கு விற்க நினைக்கும் ஜெகபதி பாபுவின் முயற்சியை விஜய் சேதுபதி முறியடித்தாரா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.
விஜய் சேதுபதி வழக்கம் போல், தனக்கே உரித்தான நடிப்பில் அனைவரையும் கவர்கிறார். ஆனால், படம் முழுக்க பேசிக் கொண்டே இருப்பதால் ஒரு கட்டத்திற்கு மேல் எரிச்சலடைய வைத்து விடுகிறார்.
ஸ்ருதிஹாசனும், சாய் தன்ஷிகாவும் இந்த படத்திற்கு எதற்காக தேவைபட்டார்கள் என்று தெரியவில்லை. ஏதோ வந்து செல்வது போன்று காட்சியமைத்திருக்கிறார்கள்.
ஜெகபதி பாபுவின் வில்லத்தனம் சற்று குறைவு தான்.
வலுவான கதை இருந்தும் திரைக்கதையில் சற்று தடுமாற்றம் நிகழ்ந்திருக்கிறது.
பராமரிக்கப்பட வேண்டிய விவசாயிகள் சங்கம், கூட்டுப் பண்ணை திட்டம், கார்ப்பரேட் கம்பெனிகளின் திருட்டுத்தனம் என பல விவசாயம் சார்ந்த நல்ல விஷயங்களை எடுத்து முன் வைத்தாலும் அதை சரியான முறையில் சொல்ல வராமல் போனது சற்று ஏமாற்றத்தை ஏற்படுத்துகிறது.
பின்னனி இசை படத்தோடு இணைந்து பயணிக்கிறது. ஒளிப்பதிவும் குறை சொல்லும்படியாக இல்லை.
லாபம் – எதிர்பாப்பில் சற்று ஏமாற்றம் …..





