Spotlightவிமர்சனங்கள்

சூ மந்திரகாளி விமர்சனம் 2.75/5

ஸ்வர் கொற்றவை இயக்கத்தில் புதுமுக நடிகர்கள் பலரது நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் “சூ மந்திரகாளி”.

சாதாரணமாக கிராமத்தில், தான் நன்றாக இருந்தாலும் நன்றாக இல்லாவிட்டாலும் நம்ம பங்காளி மட்டும் நல்லா இருக்க விடவேக்கூடாது என்ற மனநிலை காலம்காலமாக கிராமபுறத்தில் ஒவ்வொருவருக்கும் இருந்தது, இப்போதும் இருந்து கொண்டு தான் இருக்கிறது.

ஒவ்வொருவரும் மற்றவருக்கு பில்லி சூனியம் வைத்துக் கொண்டு பங்காளிகளை முன்னேற விடக்கூடாது என்று சுற்றி வருகின்றனர்.

இதே மனநிலையில் அனைவரும் இருப்பதால் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் கிராமமே முன்னேறாமல் இருப்பதை கண்டு நாயகன் கார்த்திகேயன் வேலு கவலை கொள்கிறார். நமது கிராமத்தை மாற்ற வேண்டும் என்று அருகில் மலையில் இருக்கும் ஒரு கிராமத்திற்கு சென்று தன் கிராம மக்களையும் பங்காளிகளையும் திருத்த பில்லி சூனியம் வைக்க செல்கிறார்.

அந்த மலைகிராமத்தில் இருக்கும் அனைவருமே மாந்தீரகத்தில் சிறந்து விளங்குகிறார்கள்.அதிலும் நாயகியாக வரும் சஞ்சனா புர்லி பெரிய மாந்திரவாதியாக இருக்கிறார்.

நாயகியை பார்த்ததும் காதல் வயப்படுகிறார் நம்ம நாயகன். பலரின் எதிர்ப்பை மீறி நாயகன் நாயகியை கரம் பிடித்தாரா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.

நாயகன் கார்த்திகேயன் வேலு, கதைக்கேற்ற நடிப்பை கொடுத்திருந்தாலும், ஆங்காங்கே கதையோடு ஒன்றாமல் நிற்பது சற்று சறுக்கல் தான்.

அழகு தேவதையாக வந்து காட்சி தருகிறார் சஞ்சனா புர்லி. படம் முழுக்க அழகாகவே வந்து செல்கிறார். இன்னும் சற்று முக பாவனைகளை கொடுத்திருந்தால் இன்னும் சிறப்பாகவே ரசித்திருக்கலாம்.

படத்திற்கு பலம் என்றால் அது கிராமத்தை முழுவதுமாக நடிக்க வைத்திருந்தது. ஒவ்வொருவரும் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை குறைவில்லாமல் நிறைவாகவே கொடுத்து ரசிக்க வைத்தார்கள். என்ன ஒரு சின்ன ஏமாற்றம் என்றால், ஒரு சில இடங்களில் ஓவர் டோஸாக தெரிந்தது தான்.

படத்திற்கு மற்றொரு பலம் என்றால் அது ஆர்ட் டைரக்டர் ஜே கே அந்தோணி தான். மலைக்கிராமத்தை அழகாக செதுக்கியிருக்கிறார்.

முகம்மது ஃபர்கானின் காட்சியமைப்பு ஒவ்வொரு காட்சியையும் அழகேற்றியிருக்கிறது.

சதீஷ் ரகுநாதனின் இசையில் ஓரிரு பாடல்கள் மட்டுமே கேட்கும்படியான ரகம்.

பின்னனி இசையில் முருகன், கதையோடு பயணம் புரிய வைத்துள்ளார்.

வித்தியாசமான முயற்சிக்கு இயக்குனருக்கு பெரும் வாழ்த்துகள். படத்தில் இடம் பெற்றிருந்த காமெடிகள் அனைத்தும் ஹிட் அடித்திருந்தால் படமும் ஹிட்டை நோக்கி நகர்ந்திருக்கும்., ஆனால், ஆங்காங்கே மட்டும் சிரிக்கும்படியாக வைத்திருப்பதால் கொஞ்சம் தொய்வடைகிறது.

மற்றபடி ஒருசிலருக்கு ஒருமுறை ரசிக்க வைக்கலாம் இந்த சூ மந்திரகாளி..

Facebook Comments

Related Articles

Back to top button