Spotlightசினிமா

ரஜினிகாந்தின் 170-வது படத்தைத் தயாரிக்கும் லைகா!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது தனது 169வது படமான ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை நெல்சன் இயக்கி வருகிறார்.

மிகப்பெரும் பொருட்செலவில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது. படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடையும் தருணத்தில் இருக்கிறது.

இந்நிலையில், சற்று முன் பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் ரஜினிகாந்தின் 170 வது படத்தை தயாரிப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.

இந்த படத்தை ஜெய்பீம் படத்தினை இயக்கிய ஞானவேல் இயக்குவார் என்றும் அனிருத் இசையமைப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சுபாஷ்கரன் தயாரிப்பில் லைகா பொறுப்பாளர் தமிழ்க்குமரன் இப்படத்தினை வழங்குவார் என்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய நட்சத்திரங்கள், தொழில்நுட்ப கலைஞர்களின் அறிவிப்பு அடுத்தடுத்து வெளியாகும் என்றும் 2024ல் இப்படம் திரைக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button