Spotlightசினிமா

டி. இமான் இசையில் மிரட்ட வரும் ‘சிக்னல் அட் 11:30’ – டிரெய்லர் மற்றும் இசை வெளியீடு!

மலர்விழி நடேசன் எழுதி இயக்கியுள்ள ‘சிக்னல் அட் 11:30’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.

அலர் ஸ்டுடியோஸ் சார்பில் மலர்விழி நடேசன் மற்றும் ஷிவானி சுப்ரமணி இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளார். சந்தோஷ் பிரதாப், புஜிதா பொன்னாடா, பவ்யா திரிகா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் முனீஷ்காந்த், ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

வித்தியாசமான சைக்கலாஜிக்கல் த்ரில்லராக உருவாகியுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குநர்கள் பேரரசு, ஆர்.வி. உதயகுமார், தயாரிப்பாளர் தனஞ்செயன், நடிகர் விதார்த் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.

நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் பேரரசு, “இளையராஜாவுக்கு அடுத்து மனதைத் தொடும் இசையைத் தருபவர் டி. இமான்” என்று பாராட்டினார். தயாரிப்பாளர் தனஞ்செயன், படத்தைப் பார்த்ததாகவும், வித்தியாசமாகவும் சுவாரஸ்யமாகவும் இருப்பதாகவும் தெரிவித்தார்.

நடிகர் சந்தோஷ் பிரதாப் பேசுகையில், பல ஆண்டுகளுக்குப் பிறகு இப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருப்பதாகக் கூறினார். படத்தின் வெற்றிக்கு இசையமைப்பாளர் டி. இமானின் பங்களிப்பு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளதாகவும் பாராட்டினார்.

இயக்குநர் மலர்விழி நடேசன் பேசுகையில், இது தனது இரண்டாவது திரைப்படம் என்றும், டி. இமானின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இசையமைப்பாளர் டி. இமான், பெண் இயக்குநருடன் பணியாற்ற வேண்டும் என்ற விருப்பமும் இப்படத்தில் இணைவதற்கு முக்கியக் காரணம் எனக் கூறினார்.

வித்தியாசமான கதைக்களம், டி. இமானின் இசை, சந்தோஷ் பிரதாப்பின் நடிப்பு என எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘சிக்னல் அட் 11:30’ திரைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button