ஆண்டுகள் பல கடந்தும், சென்னை மற்றும் மேன்சன் ஆகிய வார்த்தைகள் பிரிக்க முடியாத விதிகளாகவே உள்ளன, இதில் ஏராளமான உணர்வுகள் அடங்கியுள்ளன. இது ஒரு மையம், இங்கு பல்வேறு வகையான வாழ்க்கைத் தரப்பிலிருந்து வரும் மக்கள், கனவு என்ற ஒற்றை பொதுத்தன்மையில் கூடுகிறார்கள். அவர்களின் மண்டலங்களுக்குள் செல்லுங்கள், நீங்கள் கேட்க, அனுபவபூர்வமாக உணர நிறைய கதைகள் உள்ளன. இல்லையெனில், உங்கள் கேட்ஜெட்கள் மூலம் நேரடியாக வந்து VIU வழியாக உங்கள் வீட்டுக்கு வரும் மெட்ராஸ் மேன்சனில் ஒரு பயணம் மேற்கொள்ளுங்கள். ஆதித்யா ஷிவ்பிங், வர்ஷிணி பாகல், சுப்பு, அத்துல் ரகுநாத் ஆகியோரோடு அலங்காரமாக சிறப்பு தோற்றத்தில் பவர்ஸ்டார் சீனிவாசன், வையாபுரி, சென்றாயன் நடித்திருக்கிறார்கள். சிவா இயக்கியிருக்கிறார்.
நிகழ்ச்சியின் சில சுவாரஸ்யமான விஷயங்களை பற்றி தயாரிப்பாளர் சமீர் கூறும்போது, “ராயப்பேட்டையில் உள்ள ஒரு பழைய மாளிகையின் பின்னணியில் இந்த தொடரின் கதை நடக்கிறது. வெளிப்படையாக, மேன்சன்கள் எப்போதும் இந்த மெட்ரோபாலிடன் நகரத்தின் முடிசூடப்படாத சின்னமாக மிக நீண்ட காலமாக இருந்து வருகிறது. சென்னையில் பல கனவுகளுடனும், சாதிக்கும் ஆர்வத்துடனும், தங்கள் வாழ்க்கையை புதிதாக துவங்கிய பலரின் சரணாலயமாக இது விளங்குகிறது. மெட்ராஸ் மேன்சன் டீக்கடை, லேடிஸ் ஹாஸ்டல், நெரிசலான காய்கறி மார்க்கெட் மற்றும் கிரானா சந்தை ஆகியவற்றோடு பரவி வந்திருக்கிறது. மெட்ரோ ரெயில் நிலையம் மற்றும் நிறைய கோயில்களும் மிகக் குறுகிய தூரத்தில்தான் இருக்கின்றன. இவை பெரும்பாலும் தேவதை போன்ற பெண்களால் மேலும் அழகாக்கப்பட்டிருக்கும்.
தயாரிப்பாளர் இந்த தொடரின் மிக முக்கிய கதாபாத்திரங்களை பற்றிய ஒரு சிறிய தனித்துவமான தோற்றத்தை அளிக்கிறார். “பல்வேறு கனவுகள் மற்றும் இலக்குகளை கொண்டுள்ள, சாதிக்க துடிக்கும் ஒரு இயக்குனர், ஒரு மீம் கிரியேட்டர், ஒரு மார்க்கெட்டிங் நிர்வாகி, ஒரு ரியல் எஸ்டேட் தரகர் மற்றும் பல கதாபாத்திரங்கள் இதில் பார்ப்போம்”.
டர்புகா சிவா இசையமைத்து, அந்தோணி தாசன் பாடிய இந்த தொடரின் தீம் பாடல் மிகப்பெரிய கவன ஈர்ப்பாக இருக்கும்.
“புதிய உள்ளடக்கத்தை கொண்டு வரும் நோக்கத்தில் VIU உடன் தொடர்பு கொண்டு இருப்பது என்னை போன்ற எந்த ஒரு திரைப்பட இயக்குனருக்கும் மிகவும் மகிழ்ச்சியான விஷயம். தமிழ் மொழியில் டிஜிட்டல் உள்ளடக்க தளத்தில் ஒரு புதிய பெஞ்ச்மார்க்கை கொண்டு வருவது Viu வின் குறிக்கோளாக இருக்கும். ஒவ்வொரு தொடரின் ஒவ்வொரு எபிசோட் மூலம் இது நிரூபிக்கப்படும் என நான் உறுதியாக நம்புகிறேன். சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், இது தமிழ் ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை அளிப்பதாக இருக்கும்” என்கிறார் சமீர்.
மெட்ராஸ் மேன்சன் உருவாக்கத்தில் அவரின் சில தனிப்பட்ட பிரதிபலிப்புகள் பற்றி இயக்குனர் அத்தியப்பன் சிவா கூறுகையில், “ஒருவரின் சொந்த ஊருக்கும் மேலான சொர்க்கம் எதுவும் இல்லை. ஆனால் அவர்களது பிறந்த இடத்திலிருந்து ஒதுங்கி, அவர்களின் கனவுகளைத் தொடருவதற்காக அந்நிய தேசத்தில் தஞ்சம் புகும்போது, அவர்களுக்கு ஆறுதல் மற்றும் புகலிடம் வழங்கும் ஒரு மையம் இருக்கும். இது தான் மெட்ராஸ் மேன்சன் கதையின் முக்கிய கருத்தாக இருக்கும்.
வாடகைக்கு வீடு தேடிப்போனால் ‘இது குடும்பத்திற்கு மட்டும்’ ‘சைவம் மட்டுமே அனுமதி’ மற்றும் ‘கேட் கம்யூனிட்டி’ போன்ற பல போர்டுகள் வீட்டுக்கு வெளியிலும், பத்திரிக்கை விளம்பரங்களிலும் இருக்கும். அத்தகைய தடைகள் அனைத்தையும் உடைத்து, எப்போதும் கதவு திறந்து இருக்கும் ஒரே இடம் மேன்சன் தான். மெட்ராஸ் மேன்ஷனின் பிரதான பெருமை பட்டினி கிடந்தாலும் சினிமாவில் வெற்றிக்கு போராடும் மனிதன், ஒரு வருடத்திற்கு மேலாக வேலை தேடி ஓடிக் கொண்டிருக்கும் ஒரு பலவீனமான பொறியியல் பட்டதாரி, 40 வயதிலும் இன்னும் கற்பனைகளில் மிதந்து கொண்டிருக்கும் ஒருவர், மற்றும் கனவுகள் மற்றும் திறமைகளை கொண்ட கதாபாத்திரங்களை பற்றிய கதை என்பது தான். அந்த கனவுகளில் பெரும்பாலானவை வெற்றி பெறவில்லை, தங்களுக்கு என்ன வழங்கப்பட்டதோ அதற்கேற்ப வாழ்க்கையை மாற்றிக் கொள்ளும் சூழ்நிலை, இந்த மக்கள் கவலையை மகிழ்ச்சியாய் மாற்றிக் கொள்ளும் கதை. இது தான் மெட்ராஸ் மேன்சன் மாயாஜாலமாகும். இந்த 13-எபிசோடு வலைத் தொடரில் மேன்சன் உரிமையாளர் அருகில் உள்ள டீக்கடை நாயரிடம் அடிக்கும் கிண்டல்கள் என சில மைய கதாபாத்திரங்களும் உள்ளன” என்கிறார் இயக்குனர்.
மேலும், “இந்த வலைத்தொடரில் நடித்த நடிகர்கள் தங்களது நட்பை தற்காலிகமாக ‘ப்ரோ’ என்று தொடங்கி, இறுதியில் ஒரு குடும்பமாக உணர்ச்சி ரீதியாக கட்டுப்பட்டுள்ளனர். ‘மெட்ராஸ் மேன்சன்’ தாக்கத்தின் உண்மையான மகிழ்ச்சியாக இதை உணர்கிறேன், நிச்சயம் பார்வையாளர்கள் இதை தொடர்புபடுத்திக் கொள்ள சிறப்பு அம்சம் இருக்கும் என உறுதியாக நம்புகிறேன்” என உணர்வுப்பூர்வமாக முடிக்கிறார் இயக்குனர் அத்தியப்பன் சிவா.