இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, கடந்த டிசம்பர் மாதம் தனது டுவிட்டர் பக்கத்தில் சட்ட மேதை அம்பேத்கரை விமர்சனம் செய்து கருத்து ஒன்றை வெளியிட்டு இருந்தார். இட ஒதுக்கீடு வழங்கியது குறித்து ஹர்திக் பாண்ட்யா அம்பேத்கரை விமர்சிக்கும் வகையில் பதிவிட்டு இருந்தார்.
அம்பேத்காரை அவமதிக்கும் வகையில் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துகளை பதிவு செய்த இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஹர்திக் பாண்ட்யாவின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இதையடுத்து, ஹர்திக் பாண்ட்யா மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜோத்பூரில் உள்ள நீதிமன்றத்தில், டி.ஆர் மேவால் என்பவர், மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அம்பேத்கரை இழிவு படுத்தும் வகையிலும் அரசியல் அமைப்பை அவமதிக்கும் வகையிலும் ஹர்திக் பாண்ட்யாவின் கருத்து உள்ளது எனவும் மேலும், குறிப்பிட்ட இனத்தவர்களின் உணர்வுகளை காயப்படுத்தும் வகையில் உள்ளது எனவும் என்று தனது மனுவில் தெரிவித்து இருந்தார்.
இந்த மனுவை விசாரித்த ஜோத்பூர் நீதிமன்றம், ஹர்திக் பாண்ட்யா மீது காவல்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து தக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.