
முன்னணி நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தெலுங்கு திரையுலகத்துடன் மட்டும் நின்று விடாமல் பிற மொழிகளிலும் திரைப்படங்களை தயாரித்து வருகிறது. அந்த வகையில் தங்களது நான்காவது தமிழ் திரைப்படத்தை பூஜையுடன் ஆரம்பித்துள்ளனர் .
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் சென்னை அலுவலகத்தில் #MythriTamil04 #DV4 படத்தின் படப்பிடிப்பு மற்றும் தொடக்க விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் சசி- ‘ஹாய் நானா’ சௌர்யுவ்- ஆதிக் ரவிச்சந்திரன்- ஆண்டனி பாக்யராஜ் – ராஜா – ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு, படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர். மேலும் இப்படத்தின் பாரம்பரியமான முகூர்த்த தருண படப்பிடிப்பை இயக்குநர் கீர்த்தீஸ்வரன் கிளாப் அடித்து தொடங்கி வைத்தார்.
அறிமுக இயக்குநர் கரண் அரவிந்த் குமார் இயக்கத்தில் உருவாகும் #DV 4 படத்தில் துருவ் விக்ரம் கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் பிருத்வி பாண்டியராஜன், சாய் தீனா ஆகியோர் நடிக்கிறார்கள்.ஷபி மற்றும் கரண் அரவிந்த் குமார் கதை எழுதி இருக்கும் இந்த திரைப்படத்திற்கு விக்கி ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பு பணிகளை ஜெயசூர்யா மேற்கொள்கிறார். தேசிய விருதை வென்ற விக்ரம் மோர் இப்படத்தின் ஆக்சன் காட்சிகளை வடிவமைக்கிறார். கமர்ஷியல் என்டர்டடெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி & ரவிசங்கர் யலமஞ்சிலி ஆகியோர் இணைந்து பிரம்மாண்டமான பொருட் செலவில் தயாரிக்கிறார்கள்.





