
திருச்சி அருகே கே கே நகர் பகுதியை சேர்ந்த லேடீஸ் ஹாஸ்டல் ஓனர் பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்ததால் அவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
திருச்சி கே கே நகர் பகுதியில் தனியார் லேடிஸ் ஹாஸ்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு பள்ளி, கல்லூரியில் பயிலும்பெண்கள், நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள், என பலர் தங்கியிருந்தனர்.
லாக்-டவுன் செய்யப்பட்டதால் பல பெண்கள் தங்கள் ஊருக்கு சென்றுவிட்டனர். சில பெண்கள் போக முடியாத சூழல் ஏற்பட்டது. இந்நிலையில், அந்த பெண்களை ஹாஸ்டல் ஓனர் தனது வீட்டில் தங்க வைத்து்ள்ளார்.
அங்கு, அந்த பெண்கள் குளிப்பதை தனது போனில் வீடியோவாக எடுத்துள்ளார். இதை, அந்த பெண்கள் பார்த்து போலீஸில் புகார் அளித்துள்ளனர்.
போலீஸ் விசாரணையில், ஹாஸ்டல் ஓனர் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டதை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Facebook Comments





