இந்த ஆண்டு அறிவிக்கப்பட்டுள்ள தேசிய விருதில் தமிழ் சினிமாவில் இருந்து திறமையானவர்கள் புறக்கணிப்பட்டது தொடர்பாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பரியேறும் பெருமாள், நெடுநல்வாடை, தாதா 87 உள்ளிட்ட படங்கள் சிறந்த கதையம்சத்தோடு உருவாக்கப்பட்டும், விருது கொடுத்து அங்கீகரிக்கப்படாமல் விட்டது தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இதற்கு கருத்து தெரிவித்துள்ள கவிஞர் வைரமுத்து, ‘இந்த ஆண்டு நல்ல திரைப்படம் தமிழில் இருப்பதாக நினைத்தேன், ஆனால் அதற்கு எந்த விருதும் கிடைக்கவில்லை, இதில் அரசியல் இருப்பதாக நான் கருதவில்லை, ஆனால் அரசியல் இருந்தால் கண்டிக்கதக்கது.
விருது கிடைக்கவில்லை என்று தமிழ் கலைஞர்கள் வருத்த பட வேண்டாம், ஒரு படத்திற்கு தேசிய விருதை விட பேசிய விருது தான் பெரிது அது தமிழ் படங்களுக்கு கிடைத்துள்ளது.’ என்று கூறினார்.