
இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியாகி உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த திரைப்படம் தான் “அவதார்”.
2009 ஆம் ஆண்டு இப்படம் வெளியானது. தற்போது 3D HDR தரத்தில் ரீமாஸ்டர் செய்யப்பட்டுள்ளது.
வரும் செப்டம்பர் 23-ம் தேதி புதிய தொழில்நுட்பத்தில் அவதார் படம் வெளியாக உள்ளது. அவதார் படத்தின் அடுத்த பாகம் வரும் வரை இப்படத்தை கண்டு களியுங்கள் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
பாக்ஸ் ஆபிஸில் சுமார் 2.85 பில்லியன் அமெரிக்க டாலர்களை இந்த படம் வசூலித்துள்ளது.
சிறந்த ஒளிப்பதிவு, கலை அமைப்பு மற்றும் விஷுவல் எபெக்ட்ஸ் என மூன்று பிரிவுகளில் ஆஸ்கர் விருது வென்றுள்ளது இப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
டிசம்பர் மாதம் 16 ஆம் தேதி இதன் இரண்டாம் பாகம் வெளியாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Facebook Comments





