இயக்கம்: இரா சரவணன் இயக்கத்தில் சசிகுமார், சமுத்திரகனி, ஸ்ருதி பெரியசாமி, பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் நந்தன்.
இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார்.
வணங்கான்குடி என்ற கிராமத்தில் கதை நகர்கிறது. ஊராட்சி தேர்தலுக்கான நாமினேஷன் தொடங்குகிறது. பரம்பரை பரம்பரையாக ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியே இல்லாமல் அது ஒரு கெளரவ பதவியாக தன்னோடு வைத்து வருகிறது சொம்புலிங்கத்தின் குடும்பம்.
அப்படியே யாராவது எதிர்த்து நின்றால், அவர்களை மிரட்டி தேர்தலில் இருந்து வாபஸ் வாங்கிவிடுவார்கள் சொம்புலிங் கத்தின் குடும்பத்தினர். இந்நிலையில், அத்தொகுதியான ரிசர்வ் தொகுதியாக அறிவிக்கப்படுகிறது.,
இதனால், என்ன செய்வது என்றறியாது தன் வீட்டில் வேலை பார்த்து வந்த தலீத் சமூகத்தைச் சேர்ந்த சசிகுமாரை தேர்தலில் நிக்க வைக்க திட்டமிடுகிறார் சொம்புலிங்கமான பாலாஜி சக்திவேல்.
அதன் பிறகு தேர்தலில் ஜெயித்துவிடும் சசிகுமார், வாக்களித்த மக்களுக்கு எதுவும் செய்ய முடியாத சூழலுக்கு தள்ளப்படுகிறார். அதன்பிறகு என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை.
எந்த கதாபாத்திரம் கொடுத்தாலு, அக்கதாபாத்திரமாகவே மாறி தன்னால் எந்த அளவிற்கு அக்கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுக்க முடியுமோ அந்த அளவிற்கு கொடுத்து வெற்றி காண்பவர் நடிகர் சசிகுமார். இப்படத்திலும், அதே போல் கூல் பானை என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் ரசிக்க வைத்திருக்கிறார்.
மேலும், படத்தில் நடித்த மற்ற நடிகர்களும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை உள்வாங்கி நடித்து அக்கதாபாத்திரத்தை அழகூற கொடுத்திருக்கிறார்கள். திரைக்கதையில் இன்னும் சற்று சுவாரஸ்யத்தை ஏற்றியிருந்திருக்கலாம்.
ஜிப்ரானின் பின்னணி இசை பெரிதாகவே கைகொடுதிருக்கிறது. அரசியல், அதிகாரம், பிறபடுத்தப்படுப்பட்டவர்களின் வாழ்க்கை என இயக்குனர் தனக்கான முத்திரையை கொடுத்திருக்கிறார்..
பல இடங்களில் கைதட்டல் கொடுக்க வைக்கும்படியான வசனங்களை கொடுத்திருக்கிறார் இயக்குனர் சரவணன். ஒளிப்பதிவும் பெரும் ப்ளஸ் தான்.
Facebook Comments