
மாஸ்டர்கள் அஜிதன் தவசிமுத்து, K.G விஷ்ணு, S.செல்லப்பன், S.B.அபர்பணா ஜெபா
M.A.மெர்சின், J.ஜெனிஸ் உள்ளிட்ட அறிமுக நட்சத்திரங்களின் நடிப்பில் கண்ட்ரிசைடு பிலிம்ஸ் தயாரிப்பில் சாது ஃபெர்லிங்டன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் தான் சிறுவன் சாமுவேல்.
கதைப்படி,
படம் முழுவதும் கன்னியாகுமரியில் நடைபெறுவதால், வழக்கு மொழியாக நாகர்கோவில் பகுதியில் உள்ள மொழி பயன்படுத்தப்பட்டுள்ளது. தமிழும் மலையாளமும் கலந்த மொழி வழக்கு மொழியாக படம் முழுக்க பயன்படுத்தப்பட்டுள்ளது.
சாமுவேலாக நடித்திருக்கும் அஜிதன் பள்ளியில் படித்து வரும் சிறுவன், இவனது பள்ளி நண்பனாக வருகிறான் விஷ்ணு. அஜிதனுக்கு கிரிக்கெட்டில் அளவு கடந்த நாட்டம்.
டிவியில் கிரிக்கெட் மேட்சை கண் இமைக்காமல் பார்ப்பதும், அப்பகுதியில் இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடினால் சென்று பார்ப்பதுமாக கிரிக்கெட் மீது அளவு கடந்த ஆர்வம் கொண்டவனாக இருக்கிறான் அஜிதன்.
தனக்கென்று கிரிக்கெட் பேட் ஒன்று வாங்க வேண்டும் என்று அஜிதனுக்கு ஆசை.. இந்த சூழலில், அஜிதன் ஒரு பொருளை திருட, அந்த பழியானது அவனது நண்பனான விஷ்ணு மீது விழுகிறது…
அதன்பிறகு விஷ்ணுவிற்கு என்ன ஆனது.? அஜிதன் தனக்கு பிடித்த கிரிக்கெட் பேட் வாங்கினானா ?? என்பதே படத்தின் மீதிக் கதை..
கன்னியாகுமரி மக்களின் வாழ்வியலை கண்முன்னே கொண்டு வந்ததற்காகவே இயக்குனருக்கு பாராட்டுகளை அள்ளிக் கொடுக்கலாம்…
அதற்கான மெனக்கெடல், அப்பகுதி மக்களை வேலை வாங்கிய விதம், அவரின் உழைப்பு என காட்சிகளுக்கு காட்சி ஒரு உயிரோட்டத்தைக் கொடுத்து நம்மீ ரசிக்க வைத்து விட்டார்.
அதிலும், இரண்டாம் பாதியில் மனதை வருடும் காட்சிகளில் கண்களில் மட்டுமல்லாது இதயத்தில் இருந்தும் கண்ணீர் வர வைத்து விட்டார் இயக்குனர்.
முதல் பாதி சிறுபிள்ளைத் தனமாக சென்று கொண்டிருக்க, என்னடா இது நமக்கு வந்த சோதனை என்று எண்ணிக் கொண்டிருந்த வேலையில், இரண்டாம் பாதியில் முக்கிய இடத்தில் இருந்து டாப் கியர் போட்டு கதை நகர்ந்து செல்ல, இந்த படத்தை நாம் பார்க்காமல் இருந்தால் தான் தவறு என்று புரிந்து கொண்டு… பல நாட்கள் கழித்து ஒரு வாழ்வியலை பார்த்த திருப்தியோடு நகர்ந்து வந்தோம்..
கன்னியாகுமரியின் கண்கொள்ளா காட்சிகளை கண் முன்னே நிறுத்தி சிறுவர்களிம் கண்ணோட்டத்தை காண வைத்த ஒளிப்பதிவாளருக்கு நன்றிகள்..
எந்த இடத்தில் இசை வேண்டுமோ, அந்த இடத்தில் இசை கொடுத்து நம்மை மயக்கி விட்டார் இசையமைப்பாளர்..
அஜிதன் தவசிமுத்து மற்றும் விஷ்ணு இருவரும் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியா குழந்தை நட்சத்திரங்களாக இனி நிச்சயம் ஜொலிப்பார்கள்..
நடிகர்கள்:
அஜிதன் தவசிமுத்து as சாம்
K.G விஷ்ணு as ராஜேஷ்
S.செல்லப்பன் as நெல்சன்
S.B.அபர்பணா ஜெபா
M.A.மெர்சின் as வேல்முருகன்
J.ஜெனிஸ் as சோபன்
தயாரிப்பு நிறுவனம்:
கண்ட்ரிசைடு பிலிம்ஸ்
இயக்குனர்:
சாது ஃபெர்லிங்டன்
ஒளிப்பதிவாளர்:
V.சிவானந் காந்தி
இசை:
S.சாம் எட்வின் மனோகர் & J.ஸ்டாண்ட்லி ஜான்
சவுண்ட் டிசைனர்:
R.நரசிம்ம மூர்த்தி
சவுண்ட் மிக்சர்:
P.ராகவ்
கலர்ரிஸ்ட்:
அர்ஜுன் K மேனன்