Spotlightசினிமாவிமர்சனங்கள்

ரிப்பப்பரி – விமர்சனம் 2.5/5

இயக்குனர் அருண் கார்த்திக் இயக்கத்தில், மாஸ்டர் மகேந்திரன், காவ்யா அறிவுமணி, ஸ்ரீனி, மாரி, நோபல் கே ஜேம்ஸ் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் ரிப்பப்பரி.

வித்தியாசமான தலைப்போடு உருவாகியிருக்கும் இப்படம் ரசிகர்களை எதுவரை கவர்ந்திருக்கிறது என்பதை விமர்சனம் மூலம் பார்த்து விடலாம்.

கதைப்படி,

மகேந்திரன், மாரி மற்றும் நோபல் மூவரும் நண்பர்கள். யூ டியுப்பில் சமையல் வீடியோ செய்து வெளியிட்டு வருகின்றனர். வயதுக்கேற்றாற்போல் சேட்டைகள் பலவற்றையும் செய்து வருகின்றனர்.

ஜாதி மறுப்பு திருமணம் செய்ய நினைக்கும் இளசுகளை அமானுஷ்ய சக்தி ஒன்று தலை துண்டித்து கொலை செய்து வருகிறது.

இந்நிலையில், தான் காதலிக்கும் பெண்ணை மகேந்திரன் வீட்டிற்கு இழுத்து வந்து விடுகிறார் அவரது நண்பர்.

இதனால், அந்த அமானுஷ்யம் மகேந்திரனின் நண்பனை கொன்று விடுகிறது.  மகேந்திரன், மாரி மற்றும் நோபல் மூவரையும் போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்ல, அந்த அமானுஷ்யத்தை மர்மத்தை உடைக்கிறார் காவல்துறையில் இருக்கும் இன்ஸ்பெக்டர்.

யார் அந்த அமானுஷ்யம்.? மகேந்திரன் எப்படி இந்த கதைக்குள் வந்தார்.? அமானுஷ்யத்தின் வாழ்க்கையில் என்ன நடந்தது..?? என்பதே படத்தின் மீதிக் கதை.

மாஸ்டர் மகேந்திரன், பல படங்களில் நடித்த ஒரு அனுபவம் இருந்தாலும், இன்னமும் சிறு பிள்ளைத் தனமான சில குறும்புகளை செய்வது கதைக்கானதாக தெரியவில்லை. ஆங்காங்கே சற்று ஓவர் ஆக்டிங்கை கொடுத்து காட்சியை விட்டு விலகி நிற்கிறார் மகேந்திரன்.

நண்பர்களாக வந்த மாரி மற்றும் நோபல் சற்று ஆறுதல்… இருவரின் எக்ஸ்பிரஷன் மற்றும் வசன உச்சரிப்பு இரண்டும் படத்திற்கு நன்றாகவே கைகொடுத்திருக்கிறது.

அமானுஷ்யமாக கதையில் தோன்றிய ஸ்ரீனி, படத்தின் இரண்டாம் பாதி முழுவதையும் ஆக்கிரமித்து வருகிறார். கதைக்கு தேவையானதை ஸ்ரீனி கொடுத்தாலும், கதை தொடர்ந்து அடுத்தடுத்து சென்று கொண்டே இருப்பதால், ஒரு கட்டத்தில் போதும்டா சாமிகளா. என்று கேட்கும்படியான மனநிலையை இயக்குனர் கொடுத்துவிட்டார்.

நண்பன் இறந்துகிடப்பதை காமெடி காட்சிகளாக்கியது, ஸ்ரீனியை பழிவாங்க நண்பர்கள் எடுத்துக் கொண்ட ரிவன்ஞ் என பல இடங்களில் என்னப்பா பண்ணி வச்சிருக்கீங்க என்று தான் கேட்கத் தோன்றுகிறது.

பாடல்கள் மற்றும் பின்னணி இசை ஓகே ரகமாக அமைந்தது சற்று ஆறுதல். ஒளிப்பதிவு ஓகே.

கதையின் ஓட்டத்தில் சற்று கவனமும் கதையில் அதீத கவனமும் இயக்குனர் செலுத்தியிருந்திருக்கலாம்.

Facebook Comments

Related Articles

Back to top button