Spotlightசினிமா

’இரும்புத்திரை’ இயக்குனரின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்!!

விஷால் நடிப்பில் மித்ரன் இயக்கத்தில் இந்த வருடம் வெளியானது ‘இரும்புத்திரை’. அர்ஜுன் வில்லனாக நடிக்க உருவான இப்படம் ரசிகர்களிடையே மட்டுமில்லாது நல்லதொரு விமர்சனத்தையும் பெற்றது.

இந்நிலையில், பி.எஸ்.மித்ரன் இயக்கவிருக்கும் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ஆக்ஷன் த்ரில்லர் ஜானரில் உருவாகவிருக்கும் இந்த படத்தில் ஹீரோவாக சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளாராம்.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை ‘24AM ஸ்டுடியோஸ்’ நிறுவனம் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்கவுள்ளார். படத்திற்கு ஜார்ஜ் ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார்.

படத்திற்கு இசையமைக்கவிருக்கிறார் யுவன் ஷங்கர் ராஜா.

Facebook Comments

Related Articles

Back to top button