Spotlightசினிமா

அதிகாரப்பூர்வ அறிவிப்பு; பிகிலுக்கு ‘யு/ஏ’ தரச்சான்று.. ரன்னிங் டைம் இதோ!

ட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்க உருவாகி வருகிறது ‘பிகில்’. சில தினங்களுக்கு முன் வெளியான இப்படத்தின் ட்ரெய்லர் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது.

ட்ரெய்லருக்கு பிறகு படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது. இப்படத்தினை மிகவும் அதிக பொருட் செலவில் மிகவும் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது ஏஜிஎஸ் நிறுவனம்.

படம் வரும் தீபாவளி தின கொண்டாட்டமாக வெளிவர இருக்கிறது. தற்போது படத்தின் சென்சார் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் அதிகாரிகள் இப்படத்திற்கு யு/ஏ தரச் சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

இப்படத்திற்கு 2.58 மணி நேரம் ரன்னிங் டைம் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button